கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்

கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆணைப்படி கதிர்காமத்திற்கான காட்டுப் பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் தெரிவித்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இன்று (20) வியாழக்கிழமை லாகுகல பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த பாதயாத்திரை தொடர்பான கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நேற்று எமக்கு உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் செயலாளர் மதநாயக்க அனுப்பி வைத்த அக் கடிதத்தின் பிரகாரம் காட்டுப் பாதை 30ஆம் திகதி திறக்கப்படும். அதில் ஆளுநர் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

காட்டுப் பாதை திறப்பதில் முன்னொரு போதுமில்லாத வகையில் சர்ச்சை நிலவியது. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்த சர்ச்சையை நீக்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே அடியார்கள் அந்த தேதியை மையமாக வைத்து செயற்படுமாறு வேண்டுகிறேன் என்றார்.

உகந்த மலை முருகன் ஆலயத்தில் அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு 30 ஆம் திகதி ஆகும்.

அதே தீர்மானம் ஆளுநரால் மீண்டும் உறுதிப்படுத்த பட்டுள்ளது என்றார்.

கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More