கட்டாக்காலிகள் தொல்லை

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக சில முக்கிய பிரதேசங்களில் உள்ளுர் வீதிகள் தோறும் இந்த கட்டாக்காலி நாய்கள் பெருகியுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதுடன்,

சில சமயம் பாடசாலைகளுக்கு நடந்து செல்லும் மாணவர்களும் அச்சம் பீதியுடன் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கட்டாக்காலி நாய்களைக் கடந்து செல்லும்போது, அவற்றால் கடியுண்டு வைத்தியாசலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலையும் ஏற்படுகின்றது.

அதிலும் விசர்நாய் கடியாக அமைந்தால் பொது மக்கள் பெரும் அபாய நிலையை எதிர்நோக்க வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகள், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் குறித்த கட்டாக்காலி நாய்களை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோருகின்றனர்.

கட்டாக்காலிகள் தொல்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY