கடல் சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதவி முகாமையாளர் தி. சிறிபதி
கடல் சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதவி முகாமையாளர் தி. சிறிபதி

கடலில் தற்பொழுது பலவித காரணத்தினால் எண்ணெய் கசிவுகள் எற்பட்டு வருகின்றது. ஆகவே எமது கடற் பிராந்தியங்களின் சுற்றாடல்களை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் உண்டு என வடக்கு கிழக்கு கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.சிறிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் எண்ணெய் கசிவு முன் ஆய்த்த தொடர்பான பயிற்சி பாசறை மன்னாரில் ஆஹாஸ் ஹொட்டலில் வியாழக்கிழமை (27.10.2022) காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.

இவ் பயிற்சி; பாசறையானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உலக உணவு திட்டத்தின் அனுசரனையுடன் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் உலக உணவு திட்டத்தின பணிப்பாளர் ஜெனத் ஹெட்டியாராச்சி கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நிலந்த பிரியதாச , நெயில் . சிறிபதி . சசிதரன் ஆகியோர் உட்பட மன்னார் அரசு சார்பு திணைக்களங்களினதும் கடற்படை பொலிஸ் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இந்த எ;ண்ணெய் கசிவு திட்டப் பாசறை மேற்கொள்ளப்பட்டது.

இவ் திட்டமானது இவ் வருடம் முதன் முதலில் மன்னாரிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் இதைத் தொடர்ந்து விரைவில் இவ் திட்டம் ஏனைய இடங்களிலும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ் பயிற்சி பட்டறை நிகழ்வில் வடக்கு கிழக்கு கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.சிறிபதி உரையாற்றுகையில்

தற்பொழுது எமது கடற் பிராந்தியங்களில் மீன்பிடி காரணமாகவும் துறை முகங்களிலும் இவ் எண்ணெய் கசிவு அதிகரித்துச் செல்லுகின்ற அபாயம் அதிகரித்துச் செல்வதாக உணரப்படுகின்றது.

அன்மைக்காலத்தில் 2020ம் ஆண்டு கிழக்கு கடற்கரைப் பிராந்தியத்தியத்திலும் இவ்வாறு 2021ம் ஆண்டும் நீர்கொழும்பு பகுதி கடற்பரப்பில் கப்பல்களின் விபத்துக்களால் எண்ணெய் கசிவகளும் பிளாஸ்றிக் கொட்டப்பட்ட நிலையும் எற்பட்டது.

இதில் மன்னார் கடற்பரப்பும் பாதிப்புக்கு உள்ளாகியது தெரிந்த விடயம். இதன் மூலம் எமக்கு நன்கு தெரிகின்றது தற்பொழுது எமது கடற்பரப்பகளில் எண்ணெய் கசிவு அதிகரித்து வருகின்றது

இதனால் நாங்கள் அந்தந்த அரசு , அரசு சார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் விழிப்புணர்வு கொண்டு வரப்பட்டு முன்னாயித்தங்களை வகுத்து வைப்பதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றால் இதன் தாக்கத்தை நாம் குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் எமது சுற்றாடலை பாதுகாத்துக் கொள்ளலாம்

கடல் பாதுகாப்பு அதிகார சபை 35ஆம் இலக்க 2028 ஆம் ஆண்டு சட்டத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டது.

இதன் பிரதான நோக்கம் கடலில் எண்ணெய் கசிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தி இவ் எண்ணெய் கசிவிலிருந்து இவ் பிரதேசங்களின் கடல் சுற்றாடலை பாதுகாப்பதேயாகும்.

இவ் நோக்கத்தைக் கொண்டே மன்னாரில் இன்று (27) வியாழக்கிழமை உலக உணவு திட்டத்தின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

கடல் சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதவி முகாமையாளர் தி. சிறிபதி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More