
posted 1st December 2022
அனலைதீவு - பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் நேற்று (30) புதன் திடீரென தொழில் நடவடிக்கையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை கடலட்டைப் பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அனலைதீவு 3 ஆம் வட்டார கடற்றொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நேற்று முதல் கடற்றொழில் செயற்பாடுகளைப் புறக்கணித்துள்ள கடற்றொழிலாளர்கள், பருத்தித்தீவு கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளையும் காண்பித்தனர்.
இதன்போது புதிதாக கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)