
posted 15th January 2023
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக 50 லட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
கவரவில தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சிவகுமார் 2022 நவம்பர் மாதம் 24ஆம் திகதி தோட்டத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளானார்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து இவ் இளைஞன் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5 ஆந் திகதி உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் மரணத்தைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக ஹொரண பிளாண்டேசன் நிர்வாகத்தின் ஊடாக 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
அதில் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் தலா பத்து லட்சம் ரூபாவும், மனைவி சுஜீவாவுக்கு 20 இலட்ச ரூபாவுடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலையும், வீடமைப்புக்கு காணியும் வழங்க இணக்கம் காணப்பட்டிருந்த நிலையிலேயே வியாழக்கிழமை (12) இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் தலைமையில் பிரதேச அமைப்பாளர்கள் சோமதேவன், பாலா மற்றும் தோட்டக் கமிட்டித் தலைவர்களும் குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)