
posted 4th May 2022
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் ஓய்வூதியம் பெறுவோர் இவ் வருடத்தில் உயிர்வாழ்வு நற்சான்றிதழ் அவர்களது ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டுமென, மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மன்னார் பிரதேச செயலக அரச சேவை ஓய்வூதியவர்களின் நம்பிக்கை நிதியத்தின் பத்தாவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீபன் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டம், இதன் தலைவர் சிறீசற்குணநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட எம். பிரதீபன் இங்கு தொடர்ந்து கூறுகையில்;
அரச ஓய்வூதியர்களாக இருக்கும் நீங்கள், சேவையினில் இருக்கும் போது, மக்களுக்கு உங்கள் சேவையைச் செய்திருப்பீர்கள். இச்சேவையில் அனுபவம் பெற்றவர்கள் முன்னால் நான் பேசுவதற்கும், உங்களுக்கு என்னாலானவற்றைச் செய்துதவற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் பெருமையடைகின்றேன்.
உங்கள் நேரங்களை ஒதுக்கி இங்கு வருகை தந்தமைக்கு முதற்கண் நன்றி செலுத்துகின்றேன்.
எமது பிரதேச செயலகப் பிரிவில் 1200 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். நான் இங்கு பிரதேச செயலாளராக பதவியேற்ற போது ஓய்வூதிய திட்ட அலுவலகர் ஒருவர் நியமிக்கப்படாது இருப்பதை கண்டு எடுத்த நடவடிக்கையின் மூலம் தற்பொழுது இரண்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வூதியம் பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் இருப்பதனால், அதாவது, ஓய்வூதியமானது தொடர்ந்தும் அவர் இறந்த பின்பும் ஓய்வூதியம் பெறுபவருக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் நாம் இந்த உயிர்வாழ்வு நற்சான்றிதழ் (Life Certificate) சமர்ப்பித்தல் அவசியம் என்று வலியுத்திக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இது முக்கியமாக வெளிநாட்டில் வாழ்பவர்களும், மேலும், வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அவர்களை அங்கீகாரம் பெற்ற நபராக (Power of Atony) மாற்றி, தங்களது ஓய்வூதியத்தை தாங்கள் இறந்த பின்பும் கிடைக்கும் படி செய்வதனாலும் அரசாங்கம் இந்த உயிர்வாழ்வு நற்சான்றிதழ் சட்டத்தைக் கொண்டு வந்தது.
கடந்த கொவிட் காலத்தில் இவைகள் சரியான முறையில் கவனிக்கப்படாமையால் இம்முறை ஓய்வூதிய திணைக்களம் இது விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 15 பேரின் உயிர்வாழ்வு நற்சான்றிதழ் இன்னும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலக கணக்காளர் எஸ். அரிகரன் சிறப்பு அத்தியாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY