
posted 2nd May 2022
வவுனியா சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாதக் குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இலங்கையில் இருந்து படகொன்றில் புறப்பட்டு இன்று (02) அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்த இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY