
posted 6th May 2022
எமது குழந்தைகளுக்கு பால்மா இல்லாத நிலையில் எமது குழந்தைகளுக்காக கண்ணீர் விடும் அளவுக்கு இந்த அரசு எங்களை உருவாக்கி விட்டது என மன்னாரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் என். பாபு என்ற ஏழை விவசாயி இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (06.05.2022) அடம்பன் பகுதியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது இதில் கலந்து கொண்ட என். பாபு என்ற ஏழை விவசாயி தெரிவிக்கையில்;
இந்த நாட்டில் நிலவிவரும் பொருளாதார தடையின் காரணமாக நாங்கள் மிகவும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றோம். மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் நாங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றோம். இந்த அரசு விவசாயத்துக்கு தேவையான பசளையை தடை செய்ததுடன் எரிபொருளும் அற்ற நிலையிலும் இருந்து வருகின்றோம். எமது தொழில்களை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
எமது குழந்தைகளுக்கு பால்மா இல்லாத நிலையில் எமது குழந்தைகளுக்காக கண்ணீர் விடும் அளவுக்கு இந்த அரசு எங்களை உருவாக்கி விட்டது. பசி, பட்டினி, பொருளாதார சிக்கல் காரணமாக எமது மக்கள் அயல் நாடான இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றனர்.
பெரியோராகிய நாங்கள் பசியினால் துடிக்கும்போது எமது குழந்தைகளின் நிலையை இந்த அரசு ஏன் சிந்திக்காமல் இருக்கின்றது. என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)