
posted 21st May 2022
இலங்கை மக்களின் இன்றைய பொருளாதார கஷ்டத்தை உணர்ந்து இலங்கைக்கு நிவாரண கப்பலை அனுப்பியமைக்காக தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) இலங்கை மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி சார்பில் ஐக்கிய காங்கிரஸ் தலைவர் (உலமா கட்சி) மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இந்த ஊடக அறிக்கையை விடுத்துள்ளார். அதில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தற்போது மிக மோசமான பொஎஉளாதார நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள். இதனை கருத்திற்கொண்டு நமது அயல்நாடான இந்தியா உதவ முன் வருவது இந்தியாவின் அக்கறையை காட்டுவது மாத்திரமின்றி ஏனைய நாடுகளுக்கும் முன்மாதிரியாகும்.
அதே போல் இந்நிவாரணங்கள் இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களுக்கு இன மத பேதம் இன்றி வழங்கி வைப்பதில் இந்திய தூதரகம் அவதானம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம்.
இலங்கையின் நிலையை கருத்திற்கொண்டு பல நாடுகளும் கடன் வழங்கி இலங்கைக்கு மேலும் சுமையை ஏற்படுத்தவே முயலும் நிலையில் தமிழ் நாட்டு அரசின் உணவு, மருந்து இலவச உதவியை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதனை உதாரணமாகக்கொண்டு ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளும் இலங்கைக்கு இலவச நிவாரண உதவிகளை அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY