
posted 12th May 2022
நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக அமுல் நடத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று வியாழன் காலை (12.05.2022) தளர்த்தப்பட்டது.
எனினும் மீண்டும் இன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஊரடங்கு அமுலாகுமென அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் ஏவிவிடப்பட்ட குண்டர்கள் தன்னெழுச்சிப் போராட்ட போராளிகள் மீது மேற்கொண்ட அடாவடித் தாக்குதலின் எதிரொலியாக நாட்டின் பல பாகங்களிலும் பெரும் கொந்தளிப்புகள் ஏற்பட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்த பல்வேறு அரசியல்வாதிகளது வீடுகளும், சொத்துக்களும் எரிக்கப்பட்டு பெரும் கலபரம் நாட்டில் கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கே இன்று காலை ஏழு மணிக்குத் தளர்த்தப்பட்டது.
இதனையடுத்து நாடெங்கும் மக்கள் நடமாட்டம் இன்று காலை முதல் வெகுவாக அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக கிழக்கில் பல்வேறு வர்த்தக நகரங்களிலும், பொதுச் சந்தைகளிலும் பெருமளவிலான மக்கள் முண்டியடித்துக் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் திரண்ட மக்களின் நடமாட்டத்தைப் பொலிஸார் நெறிப்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இன்று ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படும். இரண்டு மணி வரை தனியார் பஸ் சேவைகள் உட்பட போக்குவரத்து சேவைகளும் வழமை போல் இடம்பெற்றன.
மேலும் விஷேடமாக கிழக்கிலுள்ள பல அரச, தனியார் வங்கிகளினதும் பணம் மீளப் பெறும் ஏ.ரீ.எம். நிலையங்களிலும் பணம் மீளப்பெறுவதற்காகப் பொது மக்கள் நீண்ட கியூ வரிசைகளில் காணப்பட்டனர்.
கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கான பவுசர்கள் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் இன்று எரிபொருட்களுடன் பல இடங்களுக்கும் கிழக்கில் பவுசர்கள் வந்து சேர்ந்தன.
இதனால் எரிபொருள் விநியோகத்தில் சுமுக நிலை ஏற்பட்டுள்ள போதிலும் சமையல் எரிவாயு விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House