
posted 21st August 2022

எஸ்.எல்.எம்.பிக்கீர்
அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான எஸ்.எல்.எம். பிக்கீரின் மறைவு குறித்து பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தைச் சேரந்த இவர், ஆசிரியராக, பிரதி அதிபராக இருந்து கல்விச் சேவையும் ஆற்றிவந்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் மீடியாபோரத்தின் ஆரம்ப கால உறுப்பினரான பிக்கீர், அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் முன்னின்று உழைத்தவராவார்.
இவரது மறைவு குறித்து திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில்;
“சகோதரர் பிக்கீர் ஊடகத்துறையில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார், ஆசிரியராக, பிரதி அதிபராக தனது தொழிலைக் கொண்டிருந்தாலும் கூட ஊடகத்துறையில் அதீத ஈடுபாடு கொண்ட ஆளுமையாகத்தன்னை நிலை நிறுத்தியவராவார்.
ஊடகங்களின் வாயிலாக இறக்காமம் பிரதேச மக்களது பிரச்சினைகளை மட்டுமன்றி மாவட்டத்தின் பொதுவான மக்கள் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் மீடியா போரம், தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அம்பாறை மாவட்ட மீடியா போரம், காத்தான்குடி மீடியாபோரம் உட்பட பல அமைப்புகளும் அன்னாரின் மறைவுகுறித்து அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை முஸ்லிம்கவுன்சிலின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூரணம் ஏ.எல்.எம். சலீம் ஆகியோரும் அனுதாப அறிக்கைகளை விடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY