ஊடகவியலாளர்களின் படுகொலை - கறுப்பு ஜனவரி பிரகடனம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் கறுப்பு ஜனவரி தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கு மாகாணத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா.கிருஸ்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிவில் சமூக ஒன்றியத் தலைவர் எஸ். சிவயோகன், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் பங்குத்தந்தை அருட்பணி கந்தையா ஜெகதாஸ், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்களின் பிரமுகர்கள், மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர்நீத்த அனைத்து ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர் மற்றும் ஊடகவியலாளர்கள் பதாதைகள் ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்களின் படுகொலை - கறுப்பு ஜனவரி பிரகடனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More