
posted 15th May 2022
தமிழ் ஒப்லங்கா உழைக்கும் கரங்கள் அமைப்பு, உழைப்போம் பிறருக்கு உதவுவோம் எனும் வேலைத்திட்டமொன்றை கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தமிழ் ஒப்லங்கா உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ். இளந்தீபன், அமைப்பின் சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளர் த. கலாதரன் ஆகியோரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் “உழைப்போம் பிறருக்கு உதவுவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் வறியமக்களும், தேவையுடைய பின்தங்கிய மக்களும் பெரும் பயனடைந்து வருகின்றனர்.
இதனடிப்படையில் துறை நீலாவணை பிரதேசத்திலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த அமைப்பின் சார்பில் உலர் உணவுப்பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஒன்று அமரர் தர்சிகாவின் ஓராண்டு நினைவு தினத்தில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துறை நீலாவணையிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மேற்படி நிகழ்வில் குறித்த உதவிகள் வழங்கப்பட்டன.
துறை நீலாவணை கிராமத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எஸ். இளந்தீபன், சர்வதேச இணைப்பாளர் த. கலாதரன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்.
இந்த அமைப்பினர் மலையகப் பகுதிகளுக்கும் தமது சேவைகளை விஸ்தரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY