
posted 1st April 2022
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் உதவித் திட்டங்கள்
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நாடு முழுவதும் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மலையக மக்களுக்கான உதவி திட்டமாக பண்டாரவளை செளதம் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஏ. யோகநந்தினி என்பவரின் உயர் கல்விக்காக 45,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
பண்டாரவளை கிரேக்கத்தோட்டம், கீழ்பிரிவு பிரதேசத்தை சேர்ந்த பி. கிருபாகரன் என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 35,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
பண்டாரவளை செளதம் தமிழ் மகா வித்தியாலய மாணவனின் பெற்றோருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 25000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டம் - மடு, பெரியபண்டிவிரிச்சான் பிரதேசத்தை சேர்ந்த சீ. சிவலிங்கம் என்பவருக்கு சிறுநீரக சிகிச்சைக்காக 25000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதேபோன்று, யாழ்ப்பாணம் தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளிக்கு சமய சிந்தனைப் புத்தகங்களும், சிறுவர் சிந்தனைக் கதைகள் உள்ளடங்கலாக 200 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த உதவித்திட்டங்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் தவத்திரு மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார்.
சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரிப்பு
வவுனியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் இளைஞன் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர்கள் வவுனியாவிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 28 ஆம் திகதி இரவு இளைஞன் ஒருவர் மீது நொச்சிமோட்டை பகுதியில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மூன்று நபர்கள் இச்சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
அவர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு சென்றபோது அவர்கள் தலைமறைவாகியது தெரிய வந்துள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை, திருட்டு 23 வயது இளைஞன் கைது
வவுனியாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 23 வயது இளைஞனை, வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.
இதன்படி, பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளுக்குள் சென்ற திருடர்கள், சமைலறை, புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், கமெரா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. ஏ. எஸ். ஜெயக்கொடியின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கற்குழி பகுதியைச் சேரந்த மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட தொலைபேசி, கைக்கடிகாரம், கமெரா மற்றும் உருக்கப்பட்ட நகைகள் என்பன அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர், போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House