உணவுத் தட்டுப்பாடு இனி இல்லை - திட்டங்கள் தீட்டியுள்ளார் அரச அதிபர்

எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் எதாவது பஞ்சம் நிலை உருவாகுமாகில் மன்னார் மாவட்டத்தின் மக்களை எவ்வாறு அதிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதைப்பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு அதற்கான முன்னோடி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு உணவு பற்றாக்குறை நிலவாதிருக்கும் நோக்கில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், வர்த்தக சங்கம் ஏனைய இது தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை (24.05.2022) இடம்பெற்றது.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்;

எமது மாவட்டத்தில் இனிவரும் மூன்று மாதங்களுக்காவது உணவு தாராளமாகக் கிடைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுடன் கூடி ஒருசில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இத்தீர்மானங்களாவன;

  • கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவைப் பயன்படுத்துவது
  • மரவள்ளி உற்பத்தியைப் பெருக்குவது
  • வர்த்தக நிலையங்களில் தேவைக்கதிகமான கையிர்ப்பு

  • பனம் பொருள் சார்ந்த உற்பத்திகளை அதிகமாக உற்பத்தியாக்க ஊக்கிவிப்பு

  • அரசு சார்பற்ற நிறுவனங்களையும் சேர்த்து பால் உற்பத்திகளை அதிகரிப்புச் செய்தல்

இது தவிர,

மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் அரிசி பெரும்பாலும் தட்டுப்பாடு நிலவாது என்பது எமது நம்பிக்கையாக இருக்கின்றது. இதற்காக நாங்கள் அதிகமான நெல்லை கையிருப்பில் வைத்துள்ளோம்.

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம் அதிகமான நெற்களை அரிசியாகவோ மாவாகவோ மக்களுக்காக கையிருப்பில் வைத்திருக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நாங்கள் சமூர்த்தி ஊடாக வழங்கிய விதைகள் இத்துடன் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 40 மரக்கறி கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சரியான உற்பத்தியை பெற்று மக்கள் பயன் அடையும் வகையான எற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பத்தாயிரம் முருங்கை மரங்கள் வழங்கியுள்ளோம். இதன் பயன்பாட்டையும் உறுதிப்படுத்தும்படி நாங்கள் கேட்டுள்ளோம்.

இவ்வாறு கடல் உணவுகளையும், கருவாடாக பதப்படுத்தி சேகரித்து வைத்துக்கொள்ளும்படியும், உணவு சம்பந்தமான பல விடயங்கள் பற்றி இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக முன்னேற்றங்களை எதிர்வரும் நாட்களில் கவனிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என அரச அதிபர் தெரிவித்தார்.

உணவுத் தட்டுப்பாடு இனி இல்லை - திட்டங்கள் தீட்டியுள்ளார் அரச அதிபர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More