
posted 25th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலவசமாக மாலை நேர வகுப்புகள்
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய விநாயகபுரம் பாலக்குடா மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"ஜேர்மன் உதவும் இதயங்கள்" எனும் அமைப்பு இந்த மாலை நேர வகுப்பை ஆரம்பித்து வைத்தது.
ஜேர்மனில் இருந்து வருகை தந்த ஜேர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பின் தலைவர் எஸ் .ஸ்ரீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதியசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்வி நிலையத்தைத் திறந்து வைத்தார் . மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
10 லட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி நிலையத்தை திறந்து வைத்த உதவிப் பிரதேச செயலாளர் சதியசேகரன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகின.
ஜேர்மன் உதவும் இதயங்கள் அமைப்பு வடக்கு - கிழக்கில் இப்படியாக 11 இடங்களில் மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)