இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

அதன்படி, அதன் தலைவராக நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் பேர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41B மற்றும் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 04இன் படி 2024 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அரச சேவையின் அனைத்து மட்டங்களிலும் ஊழலை தடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

அரச சேவையின் தார்மீக விழுமியங்கள் மற்றும் நல் இருப்பைப் பாதுகாத்து, அனைத்து வகையான ஊழல்களையும் தடுப்பதற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமது நீண்டகால அனுபவத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊழலுக்கு எதிராகப் போராடும் இலங்கையின் பொறுப்புக்கூறலை, உறுதிசெய்யும் முன்னணி நிறுவனமாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு செயற்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)