
posted 3rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இரா. சம்பந்தனுக்கு அஞ்சலி
மறைந்த, இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்சியாக அன்னாரின் உருவப் படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தபட்டது. தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
இதன்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

மேலதிக செய்திகள் | Additional News