இறையன்பை பெற்றுக் கொள்வோம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இறையன்பை பெற்றுக் கொள்வோம்

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக இன்றைய ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இந்தத் தியாகத் திருநாளில் எம்மனைவர் மீதும் இறையருள் பொழிய, இறையன்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும்.

தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது.

எனவே நாங்கள் எமது வாழ்க்கையிலும் தியாகங்கள் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது. எமது தியாகங்கள் இறைவனுக்காக செய்யப்படுபவையாக இருக்கும்போதுதான் நாம் இறைவனின் நற்கூலியையும் இறையன்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய எமது நாட்டு பொருளாதார சூழ்நிலையில் முஸ்லிம்களும், சகோதர இன மக்களும் பல பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கின்றனர், அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. நாம் எம்மால் முடிந்ததை வழங்கி அவர்களது வாழ்விலும் ஒளியேற்றுவோம்.

மேலும் எமது தொப்பிள் கொடி உறவுகளான பலஸ்தீன மக்கள் படும் சொல்லொனாத் துயரங்கள், உயிரிழப்புக்களிலிருந்து அம்மக்களை பாதுகாத்தருள இத்திருநாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிராத்தனை செய்வோமாக.

அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் மீண்டுமொரு முறை புனிதஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இறையன்பை பெற்றுக் கொள்வோம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 13.12.2025

Varisu - வாரிசு - 13.12.2025

Read More
Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More