
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இரா. சம்பந்தனின் பூதவுடல் திருமலையை வந்தடைந்தது
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (05) திருகோணமலையை வந்தடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான இரா. சம்பந்தனின் பூதவுடல் நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்றுக் காலை சிறப்பு விமானம் மூலம் திருகோணமலை விமானப் படைத்தளத்தை வந்தடைந்தது.
பின்னர், அங்கிருந்து வாகனத்தின் மூலமாக அவரின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)