
posted 30th May 2022
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற பெயரில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக ஓய்வுநிலை பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தில் அச்சுவேலிப் பகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு குரக்கன், வரகு, பயறு ஆகியவற்றின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
விவசாயிகள் பெற்றுக்கொண்ட விதைகளின் இரண்டு மடங்கு விதைகளை அறுவடையின் பின்னர் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்திடம் கட்டணம் எதுவுமின்றி வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளுடனேயே விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சிறுதானிய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விவசாயிகளுக்குச் செய்துகொடுக்கும் எனவும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுதானிய விதைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY