இரணைமடு குளத்தில்  மீன் பிடித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்

இரணைமடு குளத்தில் மீன் பிடித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் சாந்தபுரம் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடலில் நீராடிய மூன்று சகோதரர்கள் காணவில்லை
முல்லைத்தீவு - செம்மலை கடலில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்தத் துயர சம்பவம் பதிவானது. இதில், அளம்பில் பகுதியை சேர்ந்த பத்மநாதன் கிளின்ரன் (29) பத்மநாதன் விசித்திரன் (24) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த சகோதரர்கள் மூவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்களை தேடும்பணி தொடர்ந்தபோதும் நேற்றிரவு வரை எவரும் மீட்கப்படவில்லை. முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கசிப்பு இருப்பதான சந்தேகதில் இளைஞர் கைது. பொலிஸுடன் மக்கள் கலகலப்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிசார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள பொலிஸ் காவல் நிலையத்திலிருந்து நேற்று (09-05-2022)மாலை முச்சக்கர வண்டியில் சென்ற போலீசார் குறித்த வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை கைது செய்து கைது செய்ததால் போலீசாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்ட இளைஞரின் தாயார் ஆகியோர் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ்உயரதிகார்கள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடு குளத்தில்  மீன் பிடித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More