
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இன ஐக்கிய இத்தார் நிகழ்வு
இன ஐக்கிய இத்தார் நிகழ்வானது மட்டக்களப்பு மறைமாவட்ட எகட் கரிற்றாஸ் நிறுவனத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஊடாக ஏறாவூர் செங்கலடி பிரதேச பல்சமய ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பின் ஏற்பாடடில் ஏறாவூர் ஐயங்கேணி காதிரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் திங்கள் கிழமை (17) மாலை 5.45 மணிக்கு இடம்பெற்றது.
இவ் இத்தார் நிகழ்வானது இன ஐக்கியத்தை மையமாக வைத்தே நடாத்தப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதில் நான்கு சமயத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் நான்கு சமய மக்களும் கலந்து கொண்டு இன ஐக்கிய ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என இங்கு உரையாற்றிய சமயத் தலைவர்கள் தங்கள் உரைகளில் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)