இந்து பௌத்த பொதுச் செயலாளருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் இலங்கை பொளத்த இந்துப் பேரவையின் பொதுச் செயலாளர் தேசமான்ய எம்.ரி.எஸ். இராமச்சந்திரனுக்குமிடையிலான சந்திப்பு கடந்த சனிக்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் தற்போதய சூழல் பற்றியும், ஜேர்மன் சட்டநிறுவனத்தின் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சருக்கு பொதுச்செயலாளரினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை வடக்கு மாகாணத்தில் இருபத்தி மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை தனது சொந்த நிதியில் இலவசமாக கற்பித்து வருவது தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பலகோடி இலங்கைப் பணத்தை செலவு செய்த இராமச்சந்திரனினுடைய தாய்நாட்டுப்பற்றை பாராட்டுவதாகவும், தொடர்ந்து இன்றைய சூழலில் நீதி அமைச்சுவிற்கும் புதிய அரசுக்கும் கௌரவ ஆலோசகராக பணியாற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கு அவரை யூன் மாத வார இறுதியில் நடை பெறவுள்ள எமது மொழியியல் மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவத்திகு பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட பொழுது அமைச்சர் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்.

இந்து பௌத்த பொதுச் செயலாளருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More