
posted 3rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இடைநிறுத்தப்பட்ட உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட உயர்தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கையினை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகளால் பெரிதும் பாராட்டப் பெற்றுள்ளதுடன் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தார்.
அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)