
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆனைக்கோட்டையில் இன்று அகழ்வாராய்ச்சி

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக்கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என்று கருதப்படும் ஆனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (20) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷபரட்ணம் தெரிவித்தார்.
இலங்கையின் பெருங்கற்கால பண்பாட்டுக்கு உரியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆனைக்கோட்டையில் ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி, இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இந்த நிலையில் புலம்பெயர்ந்தோரின் நிதிப் பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியர்கள், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் பணிமனை அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையம் இந்த அகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)