
posted 13th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
அவுஸ்திரேலிய நிபுணர்களுடன் வடமாகாண ஆளுநர் சந்திப்பு
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கன்னிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)