அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்
அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்

கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்

“நாடுபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதன் காரணமாக நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களையும் அவலங்களையும் அனுபவிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய நிலையில் வரும் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் மக்களின் அவலங்கள் நீங்கி இயல்பு வாழ்க்கை மீண்டும் மலர இத்தினத்தில் பிரார்த்திப்போம்”

இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும், பிரபல தொழிலதிபரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்தருமான கலாநிதி சீராஸ் மீரா சாஹிப் விடுத்துள்ள ஈகைத்திருநாள் (நோன்புப் பெருநாள்) வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் விடுத்துள்ள இந்த பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிஸ்மில்லாஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வவரகாதூஹ.

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் ஈத் முபாரக்.

ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்து, விழித்திருந்து, நல்லமல்கள் பல புரிந்து இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சிகரமான நன்நாளில் நமழான் கற்றுத்தந்த பாடங்களை நமது வாழ்நாளில் தொடர்ந்து கடை பிடித்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

பிறமனிதர்களின் பசியை, பட்டினியை, துயரைப் புரிந்து கொள்கின்ற வாய்ப்பை வழங்கும் ஒரு மாபெரும் ஒளடதமாக நோன்பு விளங்குகின்றது.

நோன்பு நோற்பதன் மூலமாக இனிய குனம், உளத்தூய்மை ஏழைகளின் துயரை உணரும் தன்மை மனிதநேயம் போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒரு மனிதன் அடைந்து கொள்கின்றான்.

மேலும் எமது நாடு இன்று பாரியதொரு பொருளாதார பின்னடைவை எதிர் கொண்டுள்ளது. இதன்காரணமாக நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனால் மக்கள் சொல்லனா துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே இந்த நிலமை மிக விரைவில் நீங்க இந் நன்நாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிராத்திப்போமாக.

முஸ்லீம்களாகிய நாம் பிற மத சகோதர இன மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு நாடு எதிர்பார்க்கின்ற நிம்மதி, சமாதானம், நல்லினக்கத்தை அடைந்து கொள்வதற்கு முஸ்லீம்களாகிய நாம் அற்பணிப்புடன் செயற்பட இத்திரு நாளில் திடசங்கற்பம் பூனுவோம்

ஈத் முபாரக்.

- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY