அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள  பதிவுகளை மேற்கொள்ளுமாறு  வடமராட்சி பிரிதேச செயலகம் கோரிக்கை

அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரிதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. 2022 ம் ஆண்டிற்க்கான அரச நலன்புரி நன்மைகள் சபையின் நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் பொருட்டே அவர்களை மீள பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தைக் கொண்ட நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சகல நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவின் பொருட்டு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் நீங்கள் ஏற்கனவே பயனடைந்து கொண்டிருந்தால் அல்லது அரசு செயற்படுத்தும் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவு, சிறுநீரக நோய் கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு போன்ற ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியடையவராயின் விண்ணப்படிவத்தை

கிளிக் செய்யவும்>>>> இணையத்தளம்

எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தரவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்தி பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை 2022 செப்டெம்பர் 30ம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக சமூக பாதுகாப்பு நலன்புரிகள் தொடர்பான உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள  பதிவுகளை மேற்கொள்ளுமாறு  வடமராட்சி பிரிதேச செயலகம் கோரிக்கை
அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள  பதிவுகளை மேற்கொள்ளுமாறு  வடமராட்சி பிரிதேச செயலகம் கோரிக்கை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More