அரச உத்தியோகம் கேள்விக் குறியாக இருக்கையில் மாற்றமற்ற இளைஞர் - லெம்பேட்

எமது நாடு இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதாரத்தில் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் இன்று அரச உத்தியோகம் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. இதை அறிந்தும் இளைஞர் யுவதிகளினது மனதில் இன்னும் மாற்றம் இல்லை என்றே தோன்றுகின்றது என மன்னார் மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி ஜே.ஆர்.சி. லெம்பேட் தெரிவித்தார்.

மன்னார் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை (21.09.2022) மன்னார் மாவட்த்தின் மனிதவலு மற்றும் வேலைவாப்பு திணைக்களத்தின் தொழில் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் மாவட்ட தொழிற் சந்தை இடமபெற்றது.

இத் தொழிற் சந்தையில் பல தொழில் வழங்கும் நிறுவனங்கள் 150 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுடனான நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் திருமதி ஜே.ஆர்.சி. லெம்பேட் தொழிற் சந்தை தொடர்பாக விளக்கமளிக்கையில்;

தொழில் சந்தை என்றால் என்ன? தொழில் சந்தை என்ற விடயங்களை தொழில் தேடுதல் குழுவினர் ஊடாக பகிர்ந்தபொழுது எங்களிடம் ஒரு கேள்வி எழுந்தது.

நாங்கள் எவ்வாறான பொருட்களை சந்தைக்கு கொண்டு வர வேண்டும்? இதற்கான ஒழுங்குகளை நீங்கள் செய்வீர்களா? பொருட்களை எற்றி இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தர முடியுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதன் மூலம் தொழில் சந்தை என்பது என்ன? என்ற விளக்கம் அல்லாத நிலையை கண்டு கொண்டோம்.

இதன் காரணமாகவே மன்னாரில் தொழிற் சந்தையை இன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

ஒரு நிறுவனத்திடம் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்வதும், பொருத்தமான வேலைகளை நீங்கள் அவர்களிடம் பெற்றுக் கொள்வதுதான் இந்த தொழிற் சந்தையின் நோக்கமாக இருக்கின்றது.

எமது நாடு இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதாரத்தில் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் இன்று அரச உத்தியோகம் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் இதை அறிந்தும் இளைஞர், யுவதிகளினது மனதில் இன்னும் மாற்றம் இல்லை என்றே தோன்றுகின்றது.

நாம் பல தேவைகளுக்காக அரச உத்தியோகத்துக்காக காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால், இந்த தொழிற் சந்தையூடாக நாட்டின் எதிர்கால நோக்கங்களை நிறைவேற்ற மனித வளங்களை பெறுமதியாக மாற்றுதல் ஆகும்.

ஏதோ ஒரு வருமானத்தின் மூலம் படித்தவர்களாக இருக்கலாம் அல்லது யாராகவும் இருக்கலாம் அவர்களின் தரம் மாற வேண்டும் என்பதே இந்த தொழிற் சந்தையின் நோக்கமாகும்.

வேலை என்பது இன்று எட்டாக் கனியாக இருக்கின்ற வேளையிலே இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஏன் வருமானத்தை நோக்கி செல்ல மறுக்கின்றோம் என சிந்திக்க வேண்டும்.

நாம் வேலை தேடி வரும்போது நான் தகுதியுடையவர் எனக்கு வழங்கப்படும் வேலை பொருத்தமாக அமைய வேண்டும் என்ற சிந்தனையில் அலைகின்றோம். இலங்கையை பொறுத்தமட்டில் பலரிடம் தரமான பெறுபேறுகள் இருக்கும்.

ஆனால் தொழில் வழங்குவோர் உங்கள் அனுபவ திறமைகளையே நோக்குகின்றனர். அதற்கு நான் தயாராக இருக்கின்றேனா என்பதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நாம் பெற்ற கற்கை நெறிகளும், சான்றிதழ்களும் பேப்பர் வடிவமாக இருக்கின்றது. ஆனால் எமக்கு கிடைத்த வேலைக்கு நான் தகுதியுடையவராக இருக்கின்றேனா என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.

நாம் எமது கல்வி தராதரத்தை தவிர்த்து மேலதிகமான தராதரம் கொண்டவராக இருக்கின்றேனா என நோக்க வேண்டும்.

இதுவே இந்த தொழிற் சந்தையின் நோக்கமாகவும் இருக்கினது.

இன்று பலர் வேலை இல்லாது அலைந்து திரிகின்றனர். வேலைக்கும் உங்களுக்கும் இருக்கும் இடைவெளி என்ன என்று நோக்கும்போது பலர் கௌரவமான வேலையை மட்டுமே நான் செய்வேன் என்ற ஒரு நிலைப்பாடு.

ஆனால் வருமானத்தின் மூலம் எமது வாழ்க்கை எப்படி மாறப் போகின்றது என்பதை நாம் உணர்வதில்லை.

நாம் கற்கும்போதே எமது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுப்பதில்லை. இதுவும் எமது தொழிலுக்கும் எமக்கும் இடைவெளியாக இருக்கும்.

எமது தொழிலை பற்றி சமூதாயம் என்ன நினைக்குமோ என்ற தாழ்வு மனப்பானை கொண்டவராக அடுத்து எம்மை நாம் மதிப்பிட்டுப் பார்ப்பதில்லை.

இன்று வேலை தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அதற்கு நீங்கள் செல்ல தயாரா?

ஓவ்வொரு இளைஞனும், யுவதியும் தனித்துவ திறமை கொண்டவர்கள். தொழில் வழங்குவோர் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு திறமைகளை எதிர்பார்ப்பர்.

இன்று அரச உத்தியோகத்தைவிட தனியார் நிறுவனங்களில் கதிரைகள் வெற்றிடமாக இருக்கின்றன. ஆகவே இந்த கதிரைகளில் நீங்கள் அமர்வதற்கு இந்த தொழிற் சந்தை மன்னார் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது என அபிவிருத்தி இணைப்பாளர் தெரிவித்தார்.

அரச உத்தியோகம் கேள்விக் குறியாக இருக்கையில் மாற்றமற்ற இளைஞர் - லெம்பேட்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More