
posted 3rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அரசு அதிகாரிகளைப் பூட்டி வைத்து அச்சுறுத்திய மருந்தக உரிமையாளர்
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (01) திங்கட்கிழமை இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாடு நிர்வாகப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றைச் சோதனையிட சென்றனர்.
சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும்போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்துப் பூட்டி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவு
பொலிஸாருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரை கைது செய்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)