அரசுக்கெதிரான பூரண ஹர்த்தால் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது

அரசுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (06.05.2022) நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை முன்னிட்டு மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

பாடசாலைகள் யாவும் இயங்காத நிலையில் மன்னாரில் சகல இடங்களிலும் பழக்கடைகள் தவிர சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு காணப்பட்டன. தபாலகங்கள், வங்கிகள் யாவும் இயங்கவில்லை.

மன்னார் நகர் உட்பட சகல கிராம புறங்களிலும் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துவரத்து சபை சேவைகள் இடம்பெற்ற போதும் பிரயாணிகள் அற்ற பஸ் நிலையங்களாகவே காணப்பட்டன.

இத்துடன் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அடம்பன் பகுதியில் சகல வர்த்தக நிலையங்களையும் மூடப்பட்ட நிலையில் வர்த்தகர்கள், விவசாயிகள் என பலரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கையில் பதாதைகளை ஏந்தியவாறு அரசுத் தலைவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டு அடம்பன் நெடுங்கண்டல் பகுதியிலிருந்து மாந்தை மேற்கு பிரதேச செயலகம் வரை பேரணியாக வந்து அதில் ஒன்று கூடியவர்களாக சில மணி நேரம் அவ்விடத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவர்கள் கையில் ஏந்திய பதாதைகளில்,

'கொலைக்கார அரசு கொலைக்கார கோத்தபாய இரத்த வெறி வேண்டாம்'

'மக்களைக் கொன்று அரசியல் செய்யாதே'

'விவசாயத்தில் கைவைத்து நாட்டை இழக்காதே'

'சொந்த மக்களை சுட்டுத் தள்ளாதே'

'மக்களை பட்டினி சாவுக்குத் தள்ளாதே'

போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளைக் காணக்கூடியதாக இருந்தது.

அரசுக்கெதிரான பூரண ஹர்த்தால் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY