
posted 6th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எஸ்.சேனநாயக சமுத்திர பகுதிக்கு விஜயம்
ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்ட பிரதான நீர்த்தேக்கங்களுள் ஒன்றான இங்கினியாகல டீ.எஸ். சேனநாயக சமுத்திரத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சமுத்திரத்தின் சுற்றயல் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் அன்றாட செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ந்தனர்.
இதேவேளை மேற்படி சமுத்திரத்தின் மேலதிக நீர் வடிந்தோடும் கழியோடை ஆறு வெகுவாக பெருக்கெடுத்துள்ளது. இதனால் இந்த ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)