அமைச்சுப் பதவி சிலருக்கு பெரிதாக இருக்கலாம்.. தமிழ் மக்களின் நலனே  பெரிது -  சிவி விக்னேஸ்வரன்

சிலருக்கு அமைச்சுப் பதவி பெரிதான விடயமாக இருக்கின்ற நிலையில் எனக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாசைகளை வென்றெடுப்பதையே பெரிதாகக் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வியாழக் கிழமை (04) யாழ் நல்லூரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அமைச்சர் பதவியை ஏற்க போகிறேன் என்ற கருத்து எனது கட்சியை சார்ந்த ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஏனெனில் சிலவேளை ஊடகங்களுக்கு முன்னால் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். அவ்வாறான சம்பவங்கள் எனக்கும் ஏற்பட்டது.

எனது கட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் இணைய வழியிலே தகவல்களை தெரிவிப்பது வழமை.

தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நான் ஏற்கனவே சகலருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

நான் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது வாங்கிய சம்பளத்தை பார்க்கிலும் அரை மடங்கு அதிகமான சம்பளத்தை அமைச்சர்கள் பெற்றார்கள்.

அப்போது விரும்பியிருந்தால் அமைச்சராக பதவி வகித்து சலுகைகளை அனுபவித்திருக்கலாம். நான் அவ்வாறு செய்யவில்லை.

எனது கட்சியில் அங்கத்தவர்களுடனும் அல்லது அங்கத்துவ கட்சி தலைவர்களுடனும் பேசும்போது வெளிப்படையாகவே செயல்படுகிறேன். சிலர் என் மீதும் குற்றச் சாட்டுகளை முன்வைப்பார்கள் .

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க காத்திரமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது நிலைப்பாடாகும்.

ஆகவே, யாரும் கருத்துக்களை வெளியிடலாம். அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. எனெனில் அமைச்சுப் பதவிகளை விட உயர் பதவியான உயர் நீதிமன்ற நீதியாக பதவி வகித்தவன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவி சிலருக்கு பெரிதாக இருக்கலாம்.. தமிழ் மக்களின் நலனே  பெரிது -  சிவி விக்னேஸ்வரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More