அபிவிருத்தி லொத்தர் சபையின்  வெற்றியாளர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுனர் கௌரவ ஜீவன் தியாகராசா தலைமையில் வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் திரு. குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு . தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு. பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கற்றின் மூலம் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை மற்றும் பளைபிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட ரிக்கற்மூலம் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் சனிதா அதோடிபதிஇகப்ருக்க அதிஷ்ட ரிக்கற் ஊடாக வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும் கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராசா அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 07.01.2023 அன்று நடைபெற்றது.

துயர் பகிர்வோம்

அபிவிருத்தி லொத்தர் சபையின்  வெற்றியாளர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More