புதிய சீருடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நிந்தவூர் கலை, இலக்கியப்பேரவையின் 76 ஆவது மாதாந்தக் கூட்டமும், ஒன்று கூடலும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பேரவையின் தலைவர் டாக்டர் ஏ.எம்.ஜாபிர் தலைமையில், நிலா பிளேஸ் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முக்கிய விடயமாகப் பேரவை உறுப்பினர்களுக்கான சீருடையாக ரீசேர்ட் அறிமுகமும், விநியோகமும் இடம் பெற்றது.

தலைவர் டாக்டர். ஏ.எம்.ஜாபிர், செயலாளர், பொறியியலாளர் இஸ்மாயில் உபதலைவர் ஓய்வு நிலை அதிபர் எஸ்.அகமது ஆகியோர் சீருடை அறிமுகத்துடன், உறுப்பினர்களுக்கு வழங்கி வைத்தனர்.

அத்துடன் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் பொன்விழா தொடர்பிலும், இலக்கிய உறவுடன் அதில் பங்கு கொண்ட அனுபவங்கள் தொடர்பிலும் பேரவையின் உபதலைவரும் ஓய்வு நிலை அதிபருமான எஸ்.அகமது நிகழ்வில் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

பேரவையினால் வெளியிடப்படவிருக்கும், உறுப்பினர்களின் கலை, இலக்கிய ஆக்கங்களை உள்ளடக்கிய சிறப்பு நூலையிட்டு நிகழ்வில் ஆராயப்பட்டதுடன்.

கலந்து கொண்ட உறுப்பினர்களின் சுய ஆக்கங்களின் அரங்கேற்றமும் இடம்பெற்றது.

புதிய சீருடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House