சிறுநீர் பாதையில் ஏற்படும் உபாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் என்ன?
சிறுநீர் பாதையில் ஏற்படும் உபாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் என்ன?

விரைவில் பிரசுரிக்க இருக்கும் இந்த கட்டுரை மிகவும் முக்கியமானது.

இந்தக் கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு தருவதை நன்றாக மனனம் செய்து நீங்களும் பயன் பெறுவதோடு நிற்காமல், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவருக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைப் பார்ப்பதற்கு முன் எமது உடலில் உள்ள இதனுடன் சம்பந்தமாக உள்ள பாகங்கள் எவ்வளவு எமக்காக, எம்மைப் பாதுகாக்கிதற்காகப் படைக்கப்பட்டுள்ளன எனப் பார்ப்போம்.

இதை அறிய ஆர்வம் இல்லாதவர்கள் அல்லது நோயின் விஷயத்தை மட்டும் அறிந்தால் காணும் என்றால், அதிலிருந்து வாசியுங்கள்.

பாகம் 1 - சிறுநீர்த் தொகுதியைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்


எமது உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள எமது உடல் பல விதமான, நுணுக்கமான பொறிமுறைகளை (mechanisms)க் கையாளுகின்றது. அஃது, நமது உடலில் உள்ள உறுப்புகள் எமது உயிரைக் காப்பாற்ற வெகுவாக, இரவு, பகல் என்று பார்க்காது வேலை செய்து எல்லா தொகுதிகளையும் (systems) கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதை நாம் எப்பவும் சிந்தித்துப் பார்க்க மறக்கக் கூடாது. இனி நாம் சிந்திப்போம்.


எமது உடலில் உள்ள முக்கியமாக உள்ள உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகங்கள் (kedneys). இந்த முக்கிய உறுப்புகள் அனைத்தும் எமது உடலினுள் உள்ள நிலைகளை எல்லாம் பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் வேலை செய்ய ஒன்று சேர்ந்து இயங்குகின்றன. எமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. ஒன்று வலது புறமும், மற்றது இடது புறமும் உள்ளது.


இவ்விரு சிறுநீரகங்களும் பல மில்லியன் வடிகட்டும் குழாய்களால் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுநீரகங்களின் முக்கிய தொழில் எமது இரத்தத்திலுள்ள நல்ல, கெட்ட பதார்த்தங்களை வடிகட்டி தேவையானவற்றை எமது உடலினுள் உறிஞ்சிவிட்டு, தேவையில்லாதவற்றை (கழிவுகள்) அஃது உடலுக்கு உகந்தது இல்லாதனவற்றை வெளியேற்றி விடுகின்றன.

வெளியேறும் கழிவுகள்தான் சிறுநீரில் வெளிவருகின்றது.


நான் மேலே குறிப்பிட்டது போல நமது உடலின் அதிகமான பாகம் நீரினால் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, எமது உடலிலுள்ள அனைத்து உள்ளுறுப்புகளும் சரிவர நன்கு வேலை செய்வதற்கு நீரின் அளவை நாங்கள் கண்காணித்துக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது. நாங்கள் எவ்வளவு நீராகாரம் உட்கொள்ளுகின்றோமோ அந்த அளவை வைத்து சிறுநீரகங்கள் உள்ளேயுள்ள நீரினளவைச் சரி செய்து கொள்ளும் ஆற்றல் மிகந்தவை.

பாகம் 2

சாதாரணமாகவே நாங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இன்னமும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், சாதாரணமாக ஒரு நாளைக்கு, ஒரு ஆண் 2 லீட்டரும், ஒரு பெண் 1.5 லீட்டரும் குடிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


அதாவது, ஒரு நாளைக்குத் தேவையான நீராகாரம் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்குக் குறைவாகவும் இருக்கும்.


ஆனால், எமது உடலுக்குத் தேவையான நீரின் அளவு, காலநிலை மாற்றங்களுக்கேற்ப மாறுபடும்.


அப்படியானால், நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வது?


நாங்கள் எந்த நாட்டிலோ அல்லது எந்தக் காலநிலையிலிருந்தாலோ எமது உடல் அதன் தேவையினை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும்.

உதாரணமாக, நாங்கள் வெய்யில் காலநிலையுள்ள பிரதேசத்தில் வாழ்வோமாக இருந்தால், வெய்யிலின் அகோரம் (வெக்கை) தாங்க முடியாமல் எமக்கு தண்ணீர் விடாய் வரும். அதை நாங்கள் எமது வாழ்க்கையில் அனுபவத்தில் உணர்ந்திருப்போம் அல்லவா.

அதேபோல, நாங்கள் குளிர் காலநிலையிலிருப்போமாகில், நாம் அடிக்கடி சலம் கழிப்பதற்கு போவோமென்பதும் எமது அனுபவத்தில் இருக்குமல்லவா.

அதாவது, வெட்கை நாட்களில் நாங்கள் தண்ணீர் நிறையக் குடிப்போம், மாறாக குளிர் நாட்களில் குறையக் குடிப்போம்.

அப்படியென்றால்,

எப்போது எமக்குச் சிறுநீர் வழியில் நோய் ஏற்படும்?

நாம் தண்ணீர் தேவையேற்படும் போது, தேவையான அளவு குடிக்காமல் விட்டாலோ அல்லது சிறுநீர் வெளியே போகவிடாமல் அடக்கி வைத்திருந்தாலோ நமக்கு சிறுநீர் சம்பந்த பிரச்சனைகள் ஆரம்பிக்கத் தொடங்கும்.


இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான் - கவலையீனம்.

விளக்கமாகச் சொன்னால், நாங்கள் வேலை செய்து கொண்டேயிருப்போம். தண்ணீரையோ குடிக்கமாட்டோம். அதேபோல, உணவையும் உண்ணமாட்டோம்.

அதேபோல, சலம் கழிக்க போக வேண்டி வந்தாலும் போகாமல் எமது வேலையிலே கண்ணாக இருப்போம்.

அவ்வாறு கவலையீனமாக எமது சுகாதரத்தைக் கண்காணிப்பதில் நாங்கள் மிகவும் வீக்.

உண்மைதானே நான் சொல்லுவது.

இவ்வாறு எமது தொடர்ச்சியான கவலையீனமான தன்மையினால், நமது சிறுநீரகப் பகுதியுனுள் சிறுநீர் நிலைநிற்கத் தொடங்கும். இவ்வாறு தொடர்ந்து அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் கிருமிகள் பெருகத் தொடங்கும்.

இதற்குச் சில காரணங்கள் உண்டு, அவையும் நோயினை மிகைப்படுத்துவதற்குச் சந்தர்பம் உள்ளது.

சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அவையாவன;

  • மலத்தில் உள்ள கிருமிகள் எதேர்ச்சையாக சிறுநீர் வழியினில் தொடர்புபடும் போது
  • கர்ப்பம் தரித்தருக்கையில்
  • உடலின் எதிர்ப்புச் செய்தி குறைந்தவர்கள்
  • குறைவான நீராகாரம் குடிப்பவர்கள்
  • பிரத்தியேகமான உறுப்புகளை துப்பரவாக வைத்திருக்காமை


இவ்வாறு சிறுநீர் வழி நோய் ஏற்பட்டால்,

  • தண்ணீர் நன்றாக தேவையான அளவு குடிக்க வேண்டும்
  • கிரான் பரி ஜூஸ் குடிக்கலாம்
  • இதற்கு குறையாவிட்டால், வைத்தியரை நாடி அதற்குரியவற்றை பின்பற்ற வேண்டும்




தேனாரம் மருத்தவப் பிரிவு