
posted 25th August 2024

20% எல்லாவிதமான இறப்புகளிலிருந்து குறைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன??
இறப்பிற்கு மிகவும் காரணங்களாக உள்ள நோய்களாக, இருதய நோய்கள் (cardiovascular disease), சலரோகம் (diabetes) புற்றுநோய் (cancer) என்பனவாகும்.
இவ்வாறான கொடும் நோய்கள் எப்போதாவது ஒருநாள் நாம் நினையாத நேரம் எமது உயிரைக்குடிக்கும் என்பதை நாம் அறிவோம்.
நோய்கள் நம்மைத் தாக்கியிருந்தாலும் இருக்கும் காலம் மட்டும் நாங்கள் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கலாமல்லவா?
அந்த ஆரோக்கிய வாழ்விற்காக எமது நேரத்தில் கொஞ்சம் ஒதுக்குவது மட்டும்தான்.
இவ்வாறு செய்வதனால், அவ்வாறான இறப்பை நாங்கள் 10 தொடக்கம் 20 வீதமாகக் குறைத்து கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கலாமல்லவா?
அதற்கு செய்ய வேண்டியுது இதுதான். தசைநீட்சி அப்பியாசம் (muscle strengthening exercises) அல்லது நடவடிக்கைகள் (activities).
இதற்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. இந் நடவடிக்கைகளுக்கு கிழமைக்கு 30 தொடக்கம் 60 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமாகும்.
இப்படி செய்து வந்தால் இந்நோய்களினால் ஏற்படும் இறப்பின் தாக்கத்தை இவ்வீதக் கணக்கால் குறைத்துக் கொள்ளலாம்.
(BMJ 5th March 2022)
ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி
தேனாரம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House