60 வயதைத் தாண்டிய பின் உடற்பயிற்சி அவசியமா? நன்மைகளும் எச்சரிக்கைகளும்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00
60 வயதைத் தாண்டிய பின் உடற்பயிற்சி அவசியமா? நன்மைகளும் எச்சரிக்கைகளும்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Thanks for qgadrian!

60 வயதைத் தாண்டிய பின் உடற்பயிற்சி அவசியமா? நன்மைகளும் எச்சரிக்கைகளும்!

60 வயதைக் கடந்த பிறகு, வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்குமா?

உண்மையைச் சொல்வதானால், மிகவும் எளிமையான உடற்பயிற்சிகள் கூட உங்கள் ஆயுளை நீட்டிக்கும். இந்த வயதினை உடையவர்கள் அல்லது அதனைத் தாண்டியவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழாமல், சுயமாகவும், நிம்மதியாகவும் வாழுவதற்கு உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை இக்கட்டுரையில் விளக்கின்றேன்.

ஏன் முதிய வயதில் உடற்பயிற்சி தடைபடுகிறது?

இளமைக் காலத்தில் நாம் சுறுசுறுப்பாக நடமாடுவதால், பிரத்தியேகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் தேவைப்பட்டாலோ அல்லது விரும்பினாலோ பலருக்கு அச் சந்தர்ப்பம் அமைவதில்லை. காரணங்களாக குடும்பத்தின் சூழ்நிலை, வேலைப்பழு எனப் பல பொறுப்புகள் ஒருவரைக் கட்டுப்படுத்துவதனால் உடற்பயிற்சி செய்வதற்கான நிலையானது அமையாமல் இருக்கின்றது.

ஆனால், வயது முதிரும்போது உடல் நலனைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒருவருக்கு ஏற்படுகிறது. பிள்ளைகள் தங்களது பணிகளில் பிஸியாக இருக்கும்போது, முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யும் சந்தர்ப்பங்கள் அமாயாவதினால் உடல்நலக் குறைபாடுகள் அவர்களையும் அறியாமல் உதிக்கின்றன.

எளிமையான பயிற்சிகளின் மகத்தான நன்மைகள்

60 வயதைத் தாண்டியவர்கள் கடினமான பயிற்சிகளைச் செய்ய வேண்டியதில்லை. மிகவும் எளிமையான பயிற்சிகள் (உதாரணமாக, மிதமான நடைப்பயிற்சி போன்றவை) மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகளாவன;

  • இரத்த ஓட்டம் சீராகும்: உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், ஆக்ஸிஜனும் தேவைக்கு அளவாகச் சென்றடைகின்றன; அத்துடன் இச் சீரான இரத்தோட்டமானது கழிவுகளை எளிதாக அகற்றுவதற்கும் உதவியாகின்றது.
  • இருதய ஆரோக்கியம்: மிதமான பயிற்சி இருதயத்தை பலப்படுத்துகிறது. இருதய நோய்கள் (Cardiovascular diseases), பக்கவாதம் (Stroke) மற்றும் வகை-2 நீரிழிவு (Type 2 Diabetes) போன்ற நோய்களின் அபாயத்தை இது கணிசமாகக் குறைக்கிறது.
  • எலும்பு மற்றும் தசை பலம்: எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமை அதிகரிப்பதால், வயதான காலத்தில் தடுமாறி விழுந்து ஏற்படும் இடுப்பு எலும்பு ((hip joint or bone) மற்றும் முள்ளந்தண்டு எலும்பு முறிவுகள் (Fracture of Vertebral bones) தவிர்க்கப்படுகின்றன.
  • இதர நன்மைகள்: மூட்டு வலிகள் (Osteoarthritis pain), உயர் இரத்த அழுத்தம் (Hypertension), மற்றும் கொலஸ்ட்ராலின் (hypercholesterolaemia) அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், தூக்கமின்மைப் பிரச்சினையை நீக்கி, அல்சைமேர்ஸ் (Alzheimer’s) மற்றும் மறதி நோய் (Dementia) போன்ற மூளை பாதிப்புகளின் வீரியத்தையும் குறைக்கிறது.

அளவினை மிஞ்சினால் ஆபத்தாய் முடியும்!

ஆராய்ச்சிகளின்படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை (Blood sugar), இரத்த அழுத்தம் (High Blood Pressure), அதிகமான கொலஸ்ட்ரால் (Hypercholesterolaemia) ஆகியவற்றை இந் நடைப்பயிற்சியானது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் மிஞ்சும். ஆனால், உடற்பயிற்சியை அதிக ஆர்வத்துடன், தத்தமது உடலின் நிலையினை அறியாமல் அளவுக்கு அதிகமாகச் செய்பவர்களில் பலர், கடுமையான முழங்கால் மூட்டு வலியால் வாதைப்படுகின்றார்கள். இவர்களில் பலர் இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, உணவாக இருந்தாலும், மருந்தாக இருந்தாலும், உடற்பயிற்சியாக இருந்தாலும் அளவோடு, நிதானமாகச் செய்வதே சிறந்தது.

எனது சொந்த அனுபவம்

உங்கள் உடல் உங்களுடையது. பிறரது ஆலோசனைகளைக் கேட்டாலும், உங்கள் உடலால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டும் செய்வதே நல்லது.

நான் கடந்த 26 வருடங்களாக எந்த வகையான இறைச்சி வகைகளை முற்றிலுமாகத் தவிர்த்து, உணவில் மிகவும் கவனமாக இருந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு கொலஸ்ட்ரறோல் பிரச்சினையும் இல்லை. ஆனாலும், எனக்கு நடந்தபோது நெஞ்சு வலி (Exertional Chest Pain) ஏற்பட்டது. பரிசோதித்துப் பார்த்ததில், இருதயத்தின் மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டு குளாய்கள் 100% அடைத்திருந்ததையும், மூன்றாவது 95% அடைத்திருந்ததையும் கண்டறியப்பட்டது. அதற்கு 'ஸ்டென்ட்' (Stent, Angioplasty) செய்யப்பட்டது. இதற்குப் பரம்பரைத் தன்மையே காரணம்தான் எனக் கூறப்பட்டது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அடைப்பு ஏற்பட்டு மற்றொரு ஸ்டென்ட் வைக்கப்பட்டது. நான் உணவுக் கட்டுப்பாட்டைச் சரியாகப் பின்பற்றினாலும், ஒரு இருதய விசேஷ தாதி (Nurse) எனக்கு இரும்புச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுமாறு அறிவுறுத்தினார். ஆனால், என் உடலின் இருதய நிலைக்கு ஆட்டிறைச்சி உகந்ததல்ல என்பதால், நான் இரும்புச்சத்து மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன். நம் உடலுக்கு எது தேவை என்பதை நாம்தான் சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும்.

சிந்தனைக்கு

சிந்தியுங்கள்! வாழ்க்கை உங்களுடையது, ஆரோக்கியமும் உங்களுடையது. விஷேட மருத்துவர்களின் ஆலோசனையோடு, உங்கள் உடலின் அறிகுறிகளை விளங்கிக் கொண்டு, உங்களால் இயலுமான உடற்பயிற்சினை மேற்கொண்டு, கட்டுப்பாடான உணவுகளை சாப்பிட்டு, தரப்பட்டிருக்கும் மாத்திரைகளை கிரமமாக பாவிப்பதனால், உங்கள் ஆரோக்கியம் நன்கதாக இருக்கும் என்பதனை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

சுகமான வாழ்வு உங்கள் கையில்.

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)