
posted 18th May 2023

எமது கண்ணீர் அஞ்சலி அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரிந்தாலும் வாழும் விஷேட வைத்திய நிபுணர் Dr சிவகுமார் - நினைவில் பதிந்த நிஜங்கள்
யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலையினுள் இரு கார்கள் காலை சரியாக 7 மணிக்கு நுழைவதை அங்கு வேலை செய்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அக்கார்களில் ஒன்று, சமாதானத்தை நிலைநாட்ட வந்த இந்திய இராணுவத்தினால் (Indian Peace Keeping Force) அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட, குழந்தை நோய் வைத்திய நிபுணர், Dr சிவபாதசுந்தரம்.
அக்கார்களில் மற்றது, பொது வைத்திய நிபுணர் Dr சிவகுமார் ஆவார்.
பொது வைத்திய நிபுணர் Dr சிவகுமார், வைத்திய சேவையினைச் சேவையாகவே விரும்பிச் செய்தவர்களில் முன்னிலையில் நிற்கக்கூடியவரென்று சொல்லலாம்.
அவரது நேரகாலமற்ற சேவை சிகரத்திலும் உயரமாக இருப்பதுமல்லாமல், அவர் தன்னை இவ் வைத்தியத் தொழிலுக்கு அர்பணித்துக் கொண்டு தன் வாழ்க்கையிலே அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய பெருமான் அவர்.
நோயாளிகளின் மேலுள்ள அக்கறையும், கவனிப்பும் விபரிக்க முடியாததும், அவருடைய முயற்சிகளால் உருவாக்கப்பட்டவை அவரின் விம்பத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பதையும் அவருடன் இருந்தவர்கள், பழகியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் உணர்வுகள் விளித்தெழும்பிச் சொல்லும்.
அவர் ஆற்றிய சேவைகள், முக்கியமாக யுத்த காலத்தில் அவரும் அவருடைய குழுக்களும் தத்தமது உயிரினைப் பணயம் வைத்து ஆற்றிய சேவைகள் அனைத்தும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளாக அமைந்தன. இவை எல்லாம் அனைவரினதும் மனதிலும் நிஜத்தின் நிழலாக ஓடிக்கொண்டிருக்கும் என்பது கண்கூடு.
இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த ஒரு கல்விமானை, ஒரு மனிதனை உருவாக்கி எமக்கு உவந்த அவரின் பெற்றோருக்கு முதற்கண் எங்கள் கைகளால் கும்பிட்டு நன்றி வணக்கம் சொல்லுவோம்.
பொது வைத்திய நிபுணர் Dr சிவகுமார் தனது சேவையினை, வேத சாட்சிகளின் பூமியான (Land of Martyrs) மன்னார் மாவட்டத்தில், Mannar District, மன்னார் பட்டினத்தில் (Mannar Town) அமைந்துள்ள மன்னார் தள வைத்திய சாலையில் (Mannar Base Hospital) தொடங்கினார். அப்போது, மன்னார் மாவட்டத்திற்கு இவரின் வருகையும், இவர் உவந்த சேவையும், அச் சேவையினால் மன்னார் மக்கள் பெற்ற ஆறுதலும், அந்த மக்கள் பெற்ற அனுகூலங்கள் எல்லாவற்றையும், அதனால் அனுபவித்த உணர்வுகளையும் வார்த்தைகளினால் விபரிக்க முடியாதனவாகும். அதனைக் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வதனை விட கடவுளே மன்னாருக்கு வந்திறங்கி எம்மைக் காக்க வந்துவிட்டார் என்றுதான் அம் மக்கள் உணர்ந்தார்கள்.
Dr சிவகுமார் அவர்கள் தனது சேவையைத் தொடர அவரது வேலை மாற்றம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கால் பதிக்க வைத்தது. பல வருடங்களாக அவர் இங்கு சேவைத் தொடர்ந்தார்.
நமது நாட்டில் ஏற்பட்ட இன அழிப்புப் போராட்டங்களின் மத்தியிலும் வைத்தியசாலை ஊழியர்களின் சேவையோ அனைவராலும் பிரமிக்கத்தக்க வகையில் வைத்திய நிபுணர் சிவகுமாரின் வழிகாட்டலிலும், அவரின் குழுவின் ஒத்துழைப்பிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இக்காலம் மின்சாரம் இல்லாத இருட் சூழ்ந்த நாட்களாகும். மருந்துகள் அரிதாகின, வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன, எரிபொருள்கள் வருகை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது. உணவுத் தட்டுப்பாடு, பால்மா இன்மை, சாதாரண வாழ்க்கையே பிழிந்தெடுத்துக் கொண்டிருப்பது ஒருபக்கம், இவருடன் கூடிய மருத்துவக் குழுவானது சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக மனம் தளராத பேச்சு வார்த்தைகள் மூலம் அப்போதைக்கு கிடைக்கக்கூடிய வசதிகளினைப் பெற்று இயலுமானவரை உயிர்களை எல்லாம் காப்பாற்றப் பாடுபட்டவரின் பெருமை இவருக்குத்தான் உண்டெனலாம்.
ஆனால், தென்பகுதியிலே எல்லா வசதிகளுடனும், எல்லாவிதமான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உபகரண வசதிகளுடனும் வாழ்க்கையினை மக்கள் வாழுகையில், வட - கிழக்கு மாகாணங்களில் வலுவாகக் கட்டுப்படுத்தப்பட்ட வசதிகளில் மக்கள் வாழ வைக்கப்பட்டாலும், டாக்டர் சிவகுமாரின் முயற்சிக்கோ தளர்விருக்கவில்லை. அவற்றில் ஒன்றை குறிப்பிடுவது பொருத்தமாகும்;
1987 ஆண்டு குருதி உறைவினால் உண்டாகும் நோய்களிலிர்ந்து காப்பாற்றும் மருந்து, ஸ்றெப்ரோகைனேஸ் (Streptokinase) வடபகுதிக்கு அனுப்புவதைத் தடைசெய்யப்பட்டிருந்த போது டாக்டர் சிவகுமார் தளரவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அம்மருந்தை யாழ் போதனா வைத்திய சாலைக்குக் கொண்டுவரும் வரை அவர் முயற்சியில் தளவிர்க்கவேயில்லை. இறுதியாக அவரின் முயற்சி வெற்றி பெற்றது. அம் மருந்தும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. அதனால் எத்தனையோ உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.
அத்துடன் இன யுத்த கால சகாப்தத்தில் வைத்திய சாலையினைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலையம் (Peace Zone) ஒன்று அவசியம் என்பதனை உணர்ந்த அவர் சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கம், International Committee of the Red Cross மூலம் அறிமுகப்படுத்தி அனைவருக்கும் பாதுகாப்பு அணையைப் போட்டவரும் இவரே.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ள பல கட்டடங்கள் அவரின் பெயர் சொல்லும் என்பது அனைவரும் அறிந்ததே.
அதிதீவரச் சிகிச்சைப் பகுதி (Intensive Care Unit) பல சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளாக்கப்பட்டன.
எக்கோ காடியோகிறாம் கருவி (ECHO Cardiogram) கொணரப்பட்டு வைத்திய சேவையினை மேம்படுத்தினார்.
அதேபோன்று, றீனல் டயலிசிஸ் பகுதி (Renal Dialysis Unit), என்டோஸ்கோப்பி (Endoscopy Unit) என்று பலவிதமானவற்றினை அறிமுகப்படுத்தினார் டாக்டர் சிவகுமார் அவர்கள்.
இதனால், நோயாளிகள் மேலதிகச் சிகிச்சைக்காக வேறு வைத்திய சாலைகளை நோக்கிப் போகாமல் இருப்பதற்கும், நோயாளிகளின் அசௌகரித்தினைக் கருத்தில் கொண்டு தேவையான புதுப்புது வைத்திய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தினார்.
இதனை விட பலவித பொறுப்பான பதவிகளையும், முகாமைத்துவக் குழுவினில் முக்கிய பதவிகளையும், அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் (யாழ் கிழை) - (Government Medical Officers Association) (Jaffna Branch) யின் தலைவராகவும் இருந்தார்.
மேலும், கல்வி ரீதியாக பல மருத்துவர்களையும் (Undergraduates) திறம்படப் பயிற்றுவித்துமல்லாமல், பட்டப்பின் படிப்பிலும் (Postgraduates) வெகு அக்கறையுடனும் கல்வி புகட்டி வந்ததை மருத்துவர்கள் மறக்க முடியாது.
அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவனம், Postgraduate Institute of Medicine, த்தில் மருத்தவர்களை பயிற்றுவிப்பவராகவும் (Trainer), பரிசோதகராகவும் (Examiner) பல வருடங்களாக பணியாற்றினார்.
இதற்கு மேலாக, ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) நடைபெறும் Member of Royal College of Physician - MRCP, சோதனைகளுக்கு பரிசோதகராக (Examiner) 30 வருடங்களுக்கு மேலாக இருந்ததும், யாழ் மாவட்டத்திற்கும், மருத்துவப் பீடத்திற்கும் மிகவும் பெருமையைத் தேடித் தந்தவராவர்.
இப்படியாகக் குறிப்பிட்டவை அவரின் சேவைகளின் ஒரு கடுகளவென்றே கூறமுடியும்.
Dr சிவகுமாரின் எல்லாமான சேவைகளை மகிமைப்படுத்தவும், அவரது அயராத உழைப்பிற்கு நன்றி செலுத்துமுகமாகவும் மிகவும் உயரிய விருதாக முதன்முதல் மனிதராக வைத்திய நிபுணர் சிவகுமாருக்கு கம்பன் கழகத்தால் உவந்தளிக்கப்பட்டதுதான் மகரயாழ் விருதுவாகும்.
இவ்வாறு அவரின் சேவையானது பின்பு தென்பகுதியை நோக்கி நகர்ந்தது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு நகரிலுள்ள தேசிய வைத்திசாலைக்கு (National Hospital of Srilanka - NHSL) மாற்றம் பெற்றுச் சென்றார்.
அங்கிருந்து வேலை ஓய்வு பெற்று இலங்கை சுகாதார அமைச்சில் (Health Ministry of Srilanka), சுகாதார அமைச்சரின் ஆலோகசகராகவும் (Advisor), அத்துடன் SAITM (South Asian Institute of Technology and Medicine) ல் விரிவுரையாளராகவும் கடைசி மூச்சு உள்ளவரை சேவையாற்றினார்.
டாக்டர் சிவகுமார் எங்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம், அறிவியல் ஞானி, வழிகாட்டி, ஒழுக்கத்தை அவர் வாழ்க்கை மூலம் பழக்கியவர் என்று கூறிக் கொண்டே போகலாம். இவ்வாறு பெருமைகளைப் பெற்றுத் தந்தவர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் காட்டிய வாழ்கை நெறியை நம்மிடமே விட்டுச் சென்றார்.
அத்துடன், அனைவரும் அவரின் ஆன்மாவைக் கடவுள் தன்னகத்தே வைத்து அருள்புரியும்படியாக ஒரு நிமிடம் தியானிப்போம்.
If you want your condolence messages to be published, please send them to this email: notices@thaenaaram.com
இறுதியாத்திரையின் போது....
Condolence Messages

Dr S Sivakumaran was a dedicated clinician and teacher. His soul rest in peace.
Dr K Sivakumar

'காதலித்து கடிமணம் புரிந்த கணவனின் கல்லீரல் கள்ளுக் குடியினால் கரைந்து என்பதை கவலையுடன் அறிந்து கொண்டேன்'
Many of us who did the appointment with Dr Sivakumaran can not forget about this phrase
He was always keen on patient and family education of the illness
We used to get the signatures of spouses under the above phrase on discharge of the patients with chronic liver cell disease due to alcohol
He was so kind with patient and gave slippers for patients who had worm infestation and horlicks for those with malnutrition
He is very strict with medical students and junior doctors to achieve the right standards and patient safety
' நீங்கள் பல பிறவி எடுத்து என்னுடன் வேலை செய்ய வேண்டும் 8 weeks போதாது'
He told many of us during the teaching to push us to achieve the standard
He policed our ward work through secret window at ward 8
இவரின் நக்கல் புன்னகை தரும் பயம்
ஆமியின் கொடிய முகத்திலும் வலிமையானது
We all are blessed to see and work with him
I was lucky to see and get the blessing from him at Murukandi Temple in 2018
பாதம் தொட்டேன்
பரவசம் அடைந்தேன்
I am humbled to be examined by him for the Pharmacology and Therapeutic and scored the highest mark and awarded the CIC award for Pharmacology
Bye now sir and see you in the next birth
இன்னும் பல பிறவிகள் எடுத்து உங்களோடு வருவோம்
மகர யாழ் வென்ற
மா மனிதர் நீங்கள்
மரணம் கிடையாது
மரணம் வாழ்வின் முடிவல்ல
🙏🙏🙏🙏
Student