posted 13th March 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 09ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழுக்குச் சொல்லப்படாத பிரகாஷின் திட்டமோ அம்முவையும், ஜனாம்மாவையும் ஒன்று சேர்ப்பதற்காகவே.
- அம்மு கணேஷனினாலும், அமுதாவாலும், மீனாவாலும் மரியாதையீனப்படுத்தினார்கள். யார்தான் பொறுத்தாலும், வெறுத்தாலும் தாயால் அந்தத் துரோகத்தினைப் பொறுக்க முடியாது.
- ஜனாம்மாவினது உணர்வுகள் அமுதாவையிட்டு வெளிக்க வேண்டும் என்றும், வெளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கையோடு கோபம் கொண்ட தமிழை அடக்கிய வண்ணமாக இருந்தார், பிரகாஷ்.
- அம்முவை தமிழை வைத்துத் துரத்தினா, ஜனாம்மா. அது அம்முவை மரியாதையீனப்படுத்துவதற்காக அல்ல, அம்மு மேலும் மரியாதையினை இழக்கக் கூடாது என்பதற்காக.
- பிரகாஷின் சொல்லப்படாத உண்மையானது வெளிவருமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 09 - 10.02.2026
பிரகாஷ் போட்ட திட்டமானது ஒழுங்காகப் போய் கொண்டிருக்கின்றது போலத் தோன்றுகின்றது. கொம்பனியிலிருந்து partners இன்று வருகின்றார்கள். இப்படி வருடா வருடம் ஜனாம்மா ஒரு பாட்டியினைக் இவர்களுக்குக் கொடுப்பது வழமை. இதில் உள்ள வேலையின் பழுவால் உங்களை மறந்து விட்டேன் என்று தனது அத்தையிடம் சிபீ மன்னிச்சுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
கணேஷனோ, அம்மு வீட்டிற்கு வந்தது, உணவு சமைப்பதற்காக வந்தது, ஒன்றுமே அவனுக்கோ பிடிக்கவில்லை. ஏதாவது குளறுபடி செய்து அம்முவை வீட்டை விட்டுக் கலைக்க வேண்டும் என்றும் இதனால் தமிழுக்கும் ஜனாம்மாவிற்கான ஒற்றுமையினை உடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.
கணேஷன் நினைத்தது ஒன்று. ஆனால், நடந்தது வேறு. அனைவருக்கும் உணவினைப் பரிமாறுகையில் கணேஷன் இரசத்தினை வேண்டுமென்றே கை நழுவி விழுவது போல கொட்டி விட்டு, அம்முவின் மேலே பழியினைப் போட்டான். அதுமட்டுமல்லாமல், அம்முவைத் திட்டி என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றாய் என்றும், அதனை சுத்தம் செய்யும்படியாகவும் அனைவர் முன்னாலும் அதட்டிச் சொன்னான்.
அம்முவும் அடங்கிப் போய் கணேஷன் சொன்னதற்கிணங்க கொட்டிய இரசத்தினைத் துடைக்கையிலே, ஜனாம்மா இடைமறித்தா. எப்படி இருந்தாலும், தாயல்லவா ஜனாம்மா. அம்முவைப் பெத்தவள் அல்லவா. துடிதுடித்துப் போனா ஜனாம்மா. இதனை தமிழுடன் சேர்ந்து, பிரகாஷ், ஜனாம்மா உட்பட மற்றவர்களும் பார்க்கையிலேதான் கணேஷன் அம்முவை அதட்டினான்.
ஜனாம்மா கணேஷனை அதட்டினா. அதனால் அம்மு நிலத்தினைத் துடைத்தனை விட்டு எழும்பும்படியாக சக ஊழியருக்குக் கொடுக்கும் மரியாதையானதைக் கொடுத்தா ஜனாம்மா. அம்முவின் வேலைத் தலையங்கத்தினை கணேஷனுக்கு நினைவு படுத்தினா. அத்துடன் ஒவ்வொரு உழியருக்கும் தனது கொம்பனியில் மரியாதை இருக்க வேண்டும். அது கொடுக்கப்பட வேண்டும் என்று அதட்டிச் சொன்னா ஜனாம்மா. வீட்டிலே இளவரசியாக இருந்தவள் அம்மு. அவளது வயசில் வந்த கோளாறானது அவவினைத் தாண்டி நின்றது. அது, அவளது வீட்டினிலே வேலை செய்த, கார் றைவராக இருந்த செல்வரத்தினத்தை கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அதுவும், அம்முவின் அண்ணன் ஜெயபிரகாஷ்தான் அம்முவின் கல்யாணத்தினை நடத்தியும் வைத்தார்.
அன்றைய சூழ்நிலை ஜெயபிரகாஷால் அச்சமயம் ஜனாம்மாவிடம் சொல்ல முடியவில்லை. அதற்கான சந்தர்பத்தினை கணேஷன் கொடுக்காமல் பிரகாஷை லொறியினால் மோத வைத்து கோமாவாக்கி விட்டான். ஜனங்களின் முன்னால் அம்முவின் கல்யாணத்தினைப் பற்றி கூறியவனால், ஜனாம்மா தலைகுனிய வேண்டியதாயிற்று. இதனால், பிரகாஷுக்கோ அம்முவின் கல்யாணத்தினைப் பற்றி கூறுவதற்கான சந்தர்ப்பம் அமையாதது ஒரு துர் அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் கணக்கிட்ட கணேஷன் பிரகாஷை லொறியினால் அடித்துத் தூக்கினான்.
ஜனாம்மாவின் வீட்டிலே நடக்கவுள்ள பாட்டிக்கு நான்கு ஊழியர்கள் கொம்பனியிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள். அந்த நான்கு பேரில் அம்முவும் ஒருவராக வரவழைக்கப்பட்டா. அதுவும், பிரகாஷினால்தான். இதனால் ஏற்படப்போகும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக தமிழ் பிரகாஷிடம் தனது தாயை அழைக்க வேண்டாம் என்று கூறியும், பிரகாஷ் அதனைக் கேட்கவில்லை.
அம்முவைக் கண்டதும் கோபம் கொண்ட அமுதாவும், அமுதாவாலும், கணேஷனாலும் ஏவி விடப்பட்ட மீனாவும் அம்முவைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அண்ணி என்றும் இல்லாமலும், சகோதரி என்றில்லாமலும் அம்முவைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தவிதமான கெடுபிடிகளுக்கு தனது மகள் உட்படக்கூடாதென்று ஊழியர்களின் சட்டத்தினை முன் வைத்தா ஜனாம்மா. இதனையும் எதிர்த்து நிற்கத் துணிந்தவவாய் மீனா.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!