உலோகத் துகள்களினால் மாசடைந்துள்ள இலண்டன் அன்டகிறவுன் றயில் நிலையங்கள்
உலோகத் துகள்களினால் மாசடைந்துள்ள இலண்டன் அன்டகிறவுன் றயில் நிலையங்கள்

உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த இலண்டன் மாநகர இந்த நிலத்திற்க்குக் கீழான றயில் சேவையானது விஞ்ஞானிகளின் ஆராய்சிகளில் அகப்படாமல் தப்பித்திருந்தது இப்போது வியப்பை உண்டாக்கியுள்ளது.

மிகவும் சிறியதான காற்றிலுள்ள ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய துகள்களாக இருப்பது PM2.5 ஆகும்.

ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ் உலோகத் துகள்களானது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதா என்று இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இத் துகள்கள் சுவாசம் மூலமாக உட்புகுந்து இரத்தத்துடன் கலக்கலாமென அறியப்பட்டுள்ளது. இரத்தத்துடன் இத்துகள்கள் கலப்பதனால் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்குக் கூறுவதற்கு இன்னமும் ஆராய்ச்சி அவசியமாக உள்ளது.

துயர் பகிர்வோம்

இன்றுவரை இவ் உலோகத் துகள்களானது பயணச் சீட்டு எடுக்கும் இடங்களிலும், நடைமேடைகளிலும், சாரதியின் இருப்பிட அறையினிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் கிடைக்கப்பட்ட முடிவுகளின் படி, இவ்விடங்களில் இந்த உலோகத் துகள்களின் செறிவு அதிகமாக உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத் துகள்களானது, இரும்பின் ஒக்ஸைட் (Iron oxide) குறிப்பாக மகமைற் (Maghemite) என்று கூறப்படுகின்றது. இத்துகள்களை காந்தவியல் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரணமாக இலண்டன் சேவையானது தினமும் 5 மில்லியன் பிரயாணிகளினால் பாவிக்கப்படுகின்றது.

இவ்வாறான வெகு நுண்ணிய துகள்களானால் ஏற்படக்கூடிய சுகாதாரம் சம்பந்தமான ஆபத்துகள் எவையென இன்னமும் அறியப்படாத நிலையினில் இத்தகள்களை எவ்வாறு குறைக்கலாம் என்று நடவடிக்கைகள் எடுக்க வெவ்வேறு முறைகளைப் பாவிக்க ஆராய்ச்சிகள் தீவிரமாக உள்ளன.

இவ்வாறு சுகாதாரம் சம்பந்தமான ஆபத்துகள் பற்றிய கட்டுரைகள் தொடரும்.....