posted 1st December 2022
அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுகாதாரமான உணவு அவசியமாகின்றது, குறிப்பாக, கர்ப்பிணித் தாய்மார்களும், கர்ப்பிணிகளாக வரக்கூடிய பெண்களும் உணவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டுமென்றால் தினமும் எல்லா வகையான உணவுகளையும் மாற்றி மாற்றி அனுதினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணித்தாய்மார் இவ்வாறான உணவு வகைகளை விதம் விதனமாக உண்பதனால் தாயும், சிசுவும் உணவிலுள்ள எல்லாவிதமான உணவுச் சத்துகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறாக உண்ணும் சீரான உணவை (Balanced Diet)த் தவிர, ஃபோலிக் அமிலமும் (Folic Acid) கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஃபோலிக் அமிலமானது குளிசை வடிவில் இருக்கின்றது. அதனை மருத்துவரின் உதவியுடன் அறிவுரையினை கேட்டுப் பாவிக்கலாம்.
கர்ப்பணித் தாய்மார்கள் உண்ண வேண்டிய சில உணவு வகைகளாவன;
- காபோகைறேற் (carbohydrate) - இவ் வகையான உணவானது தாய்க்கும், சேய்க்கும் சக்தியைக் கொடுக்கும். உதாரணமாக; சோறு, பாண், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பாஸ்ரா (Pasta), நூடில்ஸ் ஆகியன இவற்றில் சில. ஹோல் மீல் (whole meal) உணவுகளாக உண்பது மிகவும்
- பழங்கள், மரக்கறி வகைகள் - இவ்வகை உணவுகளாவன - வைற்றமின்கள், கனியுப்புகள் ஆகியவற்றை தருவதோடல்லாமல், கர்ப்ப காலங்களில் ஏற்படவுள்ள மலச்சிக்கலைக் குறைத்து இலகுவாக்கும் தன்மை வாய்ந்தது. அத்துடன், 5 பகுதிகள் கொண்டவையாக இருத்தல் மிகவும் சிறந்தது.
- புரதச் சத்து - இச்சத்தானது சிசுவின் வளர்ச்சிக்கு அவசியமாகும். இச்சத்தைப் பெறுவதற்கு, இறைச்சி, மீன், முட்டை, அவரை உண்பது நல்லது.
- கல்சியம் - இக்கனிப் பொருளானது, சிசுவின் எலும்புகள் உறுதியாக வளர்வதற்கு அவசிமாகும். இச்சத்தைப் பெறுவதற்கு, பால், பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம்.
- அப்டேற்: ஃபோலிக் அமிலமானது கருத்தரிப்பதற்கு முன்பிலிருந்து கற்பகால முழுக் காலமுமாகவும், இது மட்டுமல்லாமல் விற்றமின் டீ யினை னை க்ற்பகாலத்திலும் அதனைத் தொடர்ந்து பிரசவத்தின் பின்பும் பாவிக்க வேண்டும் என்பது NICE ஆனது பரிந்துரை செய்கின்றது (the bmj | 28 June - 5 July 2025).
- நார்ச்சத்துணவு - கீரைவகைகள் உண்பதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலினைத் தவிர்க உதவும்.