posted 17th November 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
சுகாதாரமான தாய், சுகாதாரமான பிள்ளை
ஒரு தாயின் வயிற்றினிலே ஒரு சிசு உருவாகுவதென்பது படைத்த தெய்வத்தின் அருள். இந்தக் கருவானது ஒரு தாயின் உடலிலும், உணர்விலும், ஹோமோன்ஸ்களின் கட்டுப்பாட்டிலும் மாற்றங்களை உருவாக்குவதனால், ஒரு தாயின் சுகாதாரமானது பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகின்றது.
ஒரு தாய்க்கு பிள்ளை பிறந்து விட்டால், அத்தாய்க்கு மீண்டும் ஒரு கர்ப்பம் உருவாகுமானால், இந்த இரண்டாவது கற்பமானது முன்னைய கர்ப்பம் போன்று ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அந்தக் கர்ப்பதானது அநேகமாக வேறுபட்டதாகவே இருக்கும் என்று பல தாய்கள் உணர்ந்திருப்பார்கள்.
எனவேதான், ஒவ்வொரு கர்ப்பிணிகளும் அவதானமாக நடந்து கொள்ளும் வகையில் சுகாதார நடைமுறைகளைக் கையாளவும், அதாவது, அவர்களது கர்ப்ப காலத்தினை பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் கடந்து செல்ல இவை உதவும்.
1. சுகாதார, சமச்சீர் உணவு (Balanced Diet) உண்ணல் வேண்டும்
கர்ப்பமாயுள்ள எல்லா தாய்களும், பிள்ளை வளர்வதற்கான கனிப்பொருட்கள் அடங்கிய உணவு வகைகளை உண்ண வேண்டும். அவையாவன;
- புதிதான மரக்கறிவகைகளும், பழவகைகளும்
- பால், தயிர் மற்றும் கல்சியம் நிறைந்த உணவுகள்
- முழுத்தானிய உணவுகள் – சோறு, பாண், சீரியல்கள்
- புரதம் நிறைந்த உணவு வகைகள் – முட்டை, மீன், பீன்ஸ், லென்ரில்கள்
- இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் – பச்சை இலை வகை மரக்கறிகள், இளம் இறைச்சி என்பனவாகும்.
2. கர்ப்ப காலத்தில் உகந்த வைற்றமின்கள்
கர்ப்பத்திற்கு உகந்த வைற்றமின்களை உண்ண வேண்டும். அவையாவன,
ஃபோலிக் அமிலம்: இது சிசுவின் நரம்பு வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகின்றது. இந்தக் குளிசையைக் கர்ப்பமாவதற்கு முன்னிருந்து, கர்ப்பமாகி முதல் 12 கிழமைகள் குடிக்க வேண்டும் என்பது சாதாரணமாக நாம் அறிந்து கொண்டாலும், வைத்தியரின் ஆலோசனையின்றி குடிப்பது நல்லதல்ல.
வைற்றமின் டீ: இந்த வைற்றமினானது, பற்களினதும், எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானதால் இதனை வைத்தியரின் ஆலோசனையோடு பாவிக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் இவற்றினை விட வேறு வகையான வைற்றமின்களை (உதாரணமாக, வைற்றமின் ஏ) வைத்தியரின் ஆலோசனை இன்றி எடுப்பது நல்லதல்ல.
3. ஒழுங்காக கர்ப்பகால சோதனைகளுக்கு உட்படல்:
ஒழுங்காக கர்ப்பகாலத்தில் கொடுக்கப்பட்ட திகதிகளுக்கு தாயையுடையதும், சேயையுடையதுமான வைத்திய சோதனைகள் மிகவும் அவசியமாகின்றது.
இக் காலத்தில், வைத்தியரோ அல்லது மருத்துவிச்சியோ இச் சோதனைகளைச் செய்வார்கள். அவையாவன,
தாயுடைய இரத்த அழுத்தம், இரத்தம், சிறுநீர்ச் சோதனைகள், குழந்தையுடைய வளர்ச்சியைக் கணித்துக் குறித்தல், குறிப்பிட்ட கால அல்ட்றா சவுன்ட் ஸ்கான் செய்தல், மற்றும், உணவு வகைகளினதும், கர்ப்பகால அப்பியாசங்கள் என்பனவற்றின் அறிவுரைகள் இதனில் அடங்கும். தாயானவள் தனது இரத்த வகையினை மனனம் செய்து வைத்தல் அவசியமாகும்.
ஒரு கர்பிணிப் பெண் தான் கர்ப்பத்தின் முன்பு ஏதாவது வியாதிகளுக்கு மாத்திரைகள் ஒழுக்கமாக குடித்துக் கொண்டிருந்தால் அவற்றினை கிளினிக்குக்குப் போகையிலே கொண்டு சென்று அவற்றினை வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும்.
4. சுறுசுறுப்பாக இருத்தல்:
சாதாரணமாகவே அனைவரும் சுறுசுறுப்பாக இருந்தால் உடலும், உள்ளமும் சுகாதாரமாகவே இருக்கும் என்பது எமக்குத் தெரிந்தாலும், ஒரு பெண் தனது கற்பகாலத்திலும் அதனைத் தொடர வேண்டும். ஆனால், அவை கர்ப்ப காலத்தில் கொஞ்சம் மாறுபட்டனவாக இருக்கும்.
இவற்றில் நடைப்பயிற்சி செய்தல், நீந்துதல், கர்ப்பத்திற்கு உகந்த அப்பியாசங்கள் ஆகியன சில.
இப்படியாகச் செய்யும் அப்பியாசங்கள், கர்ப்பிணித்தாயுக்கு நல்லவிதமாக நித்திரையினைக் கொடுப்பதுமல்லாமல், மன அழுத்தத்தினைக் குறைத்தும், உடலின் தசைகளின் பலம் அதிகரிக்கவும் உதவுகின்றன.
இதற்காக ஒரு கர்பிணித்தாய், தான் கர்ப்பத்தின் முன்பு செய்த அப்பியாசங்களைச் செய்வதனை வி்ட்டு, வைத்திய ஆலோசனைகளின் படி நடத்தல் அவசியமாகும்.
5. தேவையான அளவு ஓய்வும், நித்திரையும் அவசியம்:
ஒரு கற்பத்தினைச் சுமக்கும் தாய்க்கு அவவுடைய ஆரம்பத்திலும், இறுதிக் கர்ப்ப காலத்திலும் சாதாரணமானதை விட மிகவும் உடலில் சோர்வு உண்டாவதை உணருவர். எனவே, அவர்கள் சாதாரணமானதை விட கூடுதலாக ஓய்வு எடுத்தலும், தேவையான அளவு நித்திரையும் கொள்ளல் அவசியமாகின்றது.
6. உகந்ததல்லாதவற்றினைத் தவிர்த்தல்:
ஒரு தாயானவள் கர்ப்பமாக இருக்கையிலே உணவு வகைகளிலோ அல்லது வேறு ஏதாவது பதார்த்தங்களை உண்ணுகையில் அவை தாயின் இரத்தம் மூலமாக கர்ப்பத்திற்கும் செல்லும் வாய்ப்புகள் உண்டு என்பதனை மறந்து விடக்கூடாது.
அல்ககோல், புகைப் பிடித்தல், உணர்வுகளைத் தூண்டும் மருந்து வகைகள் பாவிப்பது அனைத்தையும் தவிர்த்தல் அவசியமாகின்றது. இதனால், தாயானவள் தன்னையும் காத்து, கருவில் வளரும் சிசுவையும் காப்பாற்றுகின்றாள்.
7. மனதினதும், உணர்வுகளினதும் சுகாதாரத்தைக் கவனித்தல்.
கர்ப்பமானது, ஒரு சிலருக்கு மிகவும் சந்தோஷத்தினைக் கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு கவலையையும், கலக்கத்தினையும் கொடுப்பதுமல்லாமல், அவர்களின் மனநிலையிலும் தாக்கத்தினை உருவாக்குகின்றது. எனவே, உறவுகளினதோ, நண்பர்களினதோ ஆதரவை நாடுங்கள். அமைதியைப் பெறுங்கள்.
8. எப்போது நீங்கள் மருத்து உதவி தேவைப்படும்?
எப்போது ஒரு கர்ப்பிணித்தாயுக்கு அவசர மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும் என்பதானது, கர்ப்பகாலத்தில் இரத்த ஒழுக்கு அல்லது சொட்டுச் சொட்டாக இரத்தம் மாதவிடாய் வழியினால் வந்தால், தொடர்ச்சியான வயிற்று நோவு அதனால் வயிறு கடினமாக இருந்தால், தொடர்ச்சியான, கடுமையான தலையிடி, பார்வையில் மாற்றம் ஆகியன இருந்தால் மருத்துவ ஆலோசனையினை உடனே பெறுவதற்கு அண்மையில் உள்ள வைத்தியசாலைக்குக் காலம் தாழ்த்தாமல் செல்லுதல் அவசியம்.
எனவே, கர்ப்பகாலமானது ஒரு தாய்க்கு மிகவும் முக்கியமான காலமாகும். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மிகவும் அவதானமாகக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். எனவே, தாயானவள் தன்னை எவ்வாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளுவாளோ அதையும் விட மிகவும் கவனமாகத் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் காத்துக் கொள்ளல் வேண்டும்.
Article prepared by:
Thaenaaram Health Team
Medical Disclaimer:
The information provided in this article is intended for general educational and informational purposes. Although care has been taken to ensure the accuracy of the content, it should not replace individual medical advice, diagnosis or treatment. Readers are encouraged to consult an appropriate healthcare professional regarding their personal health concerns.
Thaenaaram – Informing, Supporting and Connecting Our Community.