
posted 13th January 2022
Will be updated regularly...... watch for the rest of the articles...>>>>>
Health and Safety Regulation for Display Screen Equipment
Health and Safety (Display Screen Equipment) Regulations 1992
டிஸ்பிளே (Display ) ஸ்கீறீன் (Screen) இக்குவிப்மன்ற் (Equipment) என்றால், உதாரணமாக, கணணி (computers), ரப்லெட் (Tablets), ஸ்மாட் கையடக்கத் தொலைபேசி (smart phones) இன்னும் இவை சார்ந்தவை.
உலகத்திலே அனேகமானோர் இவற்றைப் (DSE) பாவிக்காமல் இல்லை. ஏன் இப்பகூட அவற்றில் ஒன்று மூலம்தான் இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.
இந்த உபரணங்களை எப்போவாவிலுமிருந்து (அதாவது, நாளுக்கு ஒரு மணித்தியாலத்திற்குக் குறைவாகப் பாவிப்பவருக்கு), பாவிப்பவர்களுக்கு இந்த ஒழுங்குமுறை (Regulation) அவசியமில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரு மணித்தியாலமோ அல்லது அதற்குக் கூடவாக இவற்றைப் பாவிப்பவர்களுக்கு இந்த ஒழுங்கு முறை அவசியமாகின்றது. அதேநேரம், இவ்வாறு பாவிப்பவர்கள், அதாவது, அதிக மணித்தியாலங்கள் கணணியில் இருப்பவர்கள், டி.எஸ்.ஈ. பாவனையாளர்கள் (DSE users) எனக்கூறப்படுவார்கள்.
டிஸ்பிளே (Display ) ஸ்கீறீன் (Screen) இக்குவிப்மன்ற் (Equipment) என்றால், எண்ணெழுத்து (Alphanumeric) அல்லது வரைகலையைத் (Graphic Display) திரையில் காட்சிப்படுத்தும் உபகரணங்களாகும்.
ஏன் இந்த HSE ஒழுங்குமுறை அவசியமென அனைவரின் மனதினிலும் தோன்றலாம்? அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அக் காரணங்கள், எமது சுகாதாரத்துடன் சம்பந்தமாக இருக்கின்றது. எனவே, நாங்கள் மிக்க அவதானமாகவும், சரியான ஒழுங்கு முறைமையாகவும் கணணியைப் பாவிப்பதன் மூலம் அச்சுகாதார சம்பந்தமான நோய்களிலிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறான நோய்களுக்கு கணணியைத் தொடர்ந்து பல மணித்தியாலமாப் பார்க்கின்றோம் என்பது மட்டுமல்ல காரணமாகும், மாறாக, நாங்கள் எப்படி உட்காந்து கொண்டு பாவிக்குன்றோம், எப்படியான மேசையில் வைத்துப் பாவிக்கின்றோம், எங்கள் சுற்றாடல் எப்படி நாம் வேலை செய்வதற்கு சாதாகாமானதாக இருக்கின்றதா, நாம் பாவிக்கும் ஆசனம் எவ்வாறானது, நாம் எப்படி காலை அல்லது கையை வைத்திருக்கின்றோம் என்று நிறைய காரணிகள் இதில் அடங்கும்.
Thaenaaram (Health and Safety Section)