posted 11th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீ இந்தப் போட்டியில் தோற்க வேண்டும் என்று மதுவினை குளிர் பானத்தினுள் கலந்து கொடுத்தாள், ஷாம்.
- சிபீயின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று துல்லியமாகக் கண்டு பிடித்து கொஞ்சம் அல்ககோலின் வீரியத்தினைக் குறைத்தாள் தமிழ்.
- ஒன்றுமே சிபீக்குத் தெரியாதென்று பிழையாக நினைத்துவிட்டோமல்லவா – கூடாது – கூடாது.
- வெற்றியுடன் மீண்டு வந்த சிபீ, இது தனது வெற்றியல்ல, உண்மையாகவே இது தமிழின் வெற்றி என்று தனது பெருந்தன்மையினை வெளிப்படுத்தினான்.
- தமிழ், சிபீக்கு மிகவும் உதவி பண்ணுகின்றா என்று ஜனாமாவிற்குப் பெருமையாகச் சொன்னான், ஜேடீ. இங்கு ஜேடீயின் தரம் எங்கிருக்கின்றது, ஷாமின் தரம் எங்கிருக்கின்றது – இது மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருப்பாகவும் இருக்கின்றதல்லவா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 11.08.2025
Jana Foodsஇன் நற்பெயரினைக் காப்பாற்றி, பரிசினையும் தட்டிக் கொண்டு வந்தான், சிபீ. இத்தாலி நாட்டின் முக்கியமானதும், popularஆனதுமான உணவினைத் தயாரித்து முதற் சுற்றில் வெற்றி பெற்ற சிபீ, இரண்டாம் சுற்றில் வெற்றி பெறவே கூடாது என்று கங்கணம் கட்டி அல்ககோலினை குளிர் பானத்தினுள் ஷாம் கலந்து கொடுத்து விட்டு சிபீயின் தோல்வியினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
தமிழின் உடனடியான முயற்சியினால், ஷியாம் கொடுத்த அல்க்ககோலின் வீரியத்தினைக் குறைத்து போட்டிக்கு சிபீயினைத் தயார் படுத்தி விட்டாள் தமிழ்.
தமிழும், சிபீயும் வீறுநடை போட்டுக் கொண்டு போட்டிக் களத்தினுள் இறங்கினர். இவர்கள் சமைக்கப் போவது, ஜனாம்மாவின் பாரம்பரிய உணவான உழுத்தங்கழியும், கருவாட்டுக் குழம்புமாகும். இந்த உணவானது ஜனாம்மாவின் பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டுவந்த உணவாகும். இதை வைத்தே தமிழ் அடித்து நொருக்கினாள் எல்லாமான கிராமத்து உணவுகளின் தரத்தினையும்.
மீனா, சிபீயின் அம்மா, தனது மகன் சிபீ போட்டியிலே நின்று வெற்றி பெற்று விட்டான் என்று வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கையிலே, அதற்கு முட்டுக் கட்டை ஒன்றை வைத்தான், சிபீ. இல்லை அம்மா, இந்த வெற்றி எனதுடையது அல்ல. இது உண்மையாகவே தமிழினுடையது என்று பெருந்தன்மையுடன் கூறினான் சிபீ.
மீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழைத் திட்டித் தள்ளி விட்டா. எல்லாமே செய்து வெற்றிக்குக் காரணியாக இருந்த தமிழ் அடங்கிப் போய் ஓரமாக நின்றாள்.
இதில் தமிழ் ஏதாவது, வாய் திறந்தாளா? முதலில், சிபீ முதல் போட்டியில் ஜெயித்தது உண்மைதான். ஆனால், இரண்டாம் போட்டிக்கு வரும்போது அவர் மது அருந்தியிருந்தார். அது தெரியுமா உங்களுக்கு. அதுமட்டுமல்லாமல், அவருக்கு இந்தச் சமயலைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஏன் உங்களுக்கு இது தெரியுமா என்று மீனாவிடம் கேட்க தமிழுக்கு எவ்வளவு நேரமாகும்?
ஆரம்பத்தில் ஆத்திரப்பட்ட ஜனாம்மா, இப்போ றொம்ப சந்தோஷப்படுவா என்ற நினைக்கின்றேன். ஜனாம்மாவிற்கு, இப்படியான விளம்பரங்கள் பிடிக்காத்ததொன்றாகும். அத்துடன், இவ்வளவு செலவு செய்யதான் எங்கள் தரத்தினை நிரூபிக்க வேண்டுமா என்பதுதான்.
ஜனாம்மா தனது தனிப்பட்ட முயற்சியால் இவ்வளவு உயரத்திற்கு வருவதற்கு 50 ஆண்டுகள் சென்றன. சிபீ செய்தது, business promotion- இது தற்போதைய business trend. இப்படியானதான விளம்பரங்கள் செய்வதற்கு மிகவும் செலவு செய்யத்தான் வேண்டும். ஆனால், அந்தப் பணத்தினை உழைப்பதற்கு எவ்வளவு, கடின உழைப்புத் தேவை என்பதும் இருக்கின்றதல்லவா.
ஷியாம் கொடுத்த அல்ககோலால் சிபீ நிலை தடுமாறி இருந்ததால், ஒரு நொடியிலேயே பெயர் அழிந்திருக்கும். அந்த நிலையிலிருந்து சிபீயை மீட்டெடுத்தாள் தமிழ். போட்டியிலும் வென்றார்கள் – Jana Foods வெற்றி வாகையும் சூடியது.
இப்போது சொல்லுங்கள், கெட்ட உணவு, கெட்டதா? நல்லதா? இது உங்களுக்கு ஒரு மயக்க நிலையிலா இருக்கின்றது, கெட்டதா? நல்லதா என்று முடிவெடுப்தற்கு.
பொறுப்போம், பொறுத்தாப் போச்சு!
எப்படித்தான் பெரியவராய் இருந்தாலும், போட்டி என்று வந்தால், றொம்ப tensionஆகத்தான் இருக்குமல்லவா. ஜனகம்பாளுக்கும் அவ்வாறுதான் இருக்கின்றது. ஆனால், தமிழ் சொன்னது என்ன வென்றால், நான் இருக்கிறேன் ஜனாம்மா, எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகின்றேன். கடைசிவரைக்கும் சிபீ சேரைத் தோற்க விடமாட்டேன் என்றாள். அதனால், தமிழின் மேலே எல்லாரையும் விட நம்பிக்கை கொண்டுள்ள ஜனாம்மா போய்ற்று வா, வென்று கொண்டு வா என்று வாழ்த்தி அனுப்பி வைத்தா, தமிழை, ஜனாம்மா.
என்ன சார் குடிச்சிருக்கிறீங்களா? உனக்கு என்ன லூசா? நான் juiceதான் குடித்தனான் என்றான் சிபீ. இந்த விஷயம் பிறகு வரும் அவனின் நினைவுக்கு. அப்போது, ஜேடீயின் சாட்சியும் வரும், அதுவும் தெளிவாக வரும். அப்போதுதான், ஷியாம், உடனே தலையின் மேலே அடித்துச் சத்தியம் பண்ணுவாள். அவள்தான் எல்லாவற்றிற்கும் துணிந்தவளாச்சே! அதுவுமில்லாமல், குளிர் பானத்தினைக் கொண்டு வந்து கோட்டலால் தந்தார்கள் – நான் அதைக் கொண்டுவந்து உனக்குத் தந்தேன் என்று அடித்துச் சொல்லுவாள், ஷியாம். அப்போ, இது என்னவோ, கௌதத்தின் வேலையாகத்தான் இருக்கும் என்று சிபீ உடனே சிந்தித்தான், தன்னைத் தோற்கடிக்கச் கௌதம் செய்த சதி என்று பழிமுடித்தான்.
இதை விடக்கூடாது, இனி கௌதம் எந்த விதமான போட்டிகளிலே பங்கு கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய், இந்தப் போட்டியினை நடத்திய அந்த கொம்பனிக்கு இதனை அறிவிக்க வேண்டும் என்று ஷியாமுக்கு முன்னாலேயே கோபம் அடைந்தவனாய்ச் சொன்னான், சிபீ. அட, நான் என்னவோ நினைக்க ஏதோ ஒன்று நடக்கின்றதே என்று மிகவும், சந்தோஷம் அடைந்தாள் ஷியாம். இவ்வளவுதான் Matter என்று பெருமிதம் கொண்டவளாய் game over என்று மிகவும் சந்தோஷப்பட்டாள்.
தமிழ் இருக்குமட்டும், இது உடனே எல்லாம் நடந்திருமா? விட்டுவிடுவாளா தமிழ். ஒவ்வொன்றாய் பிய்த்த ஆராய்ந்திட மாட்டாள்? சிபி சார் என்ன சொன்னார்?, தான் cool drinksதான் குடித்தனான் என்று. அப்படியென்றால், அதில்தான் அல்ககோல் கலந்திருக்க வேண்டும். அதுவும், சிபீ சார் சொல்லுவதுபோல கௌதம்தான் கலந்திருக்க வேண்டும் என்று தமிழும் நினைத்தாள். ஆனால், இது உண்மைதானா என்று என்னென்று சொல்ல முடியும் என்பது தமிழின் அடுத்த பக்கமான ஊகங்கள்.
இதைக் confirm பண்ண வேண்டுமென்றால், அந்த மண்டபத்தினுள் உள்ள CCTVயின் footageகளைப் பார்த்தால்தான் தெரியும் என்று முடிவெடு்தாள், தமிழ். சிபியிடம் இந்த ideaச் சொன்னாள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
இனி என்ன நடக்கும்?
- CCTV footageஇல் ஷியாமின் தில்லாலங்கடி வேலை கண்டுபிடிக்கப்படுமா? இதனால், சிபீ என்ன முடிவெடுப்பான், ஷியாமை தன்னிடமிருந்து விலக்கி வைப்பானா? ஆனால், இது உடனே நடைபெறாத விஷயம் ஒன்றாகும்.
- தமிழின் வெற்றிதான் என்று சிபீ சொன்னதை மீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ஒரு கலகத்தினை வீட்டினுள் உருவாக்குவாவா மீனா.
- தமிழின் அமைதியான குணம் இச்சமயம் மாறுமா? மாறாது என்று நினைக்கின்றேன். ஏனென்றால், தமிழின் அம்மா சொல்லி இருக்கின்றா தமிழுக்கு, ஜனாம்மாவினையும், அவர்கள் குடும்பத்தினையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளு தமிழ் என்பதனால், தமிழ் எல்லாவற்றினையும் பொறுத்துக் கொள்ளுவா.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!