Varisu வாரிசு 23.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • றஞ்சித், தேனுவினுடைய நண்பன். collegeஜில் அவவுடன் படிக்கின்றவனாம். இவன், ஜனாம்மாவின் பழைய முதலாளியினுடைய மகனோ என்று ஒரு ஓரத்தில் தைக்கின்றது. இதனால் ஜனாம்மாவின் கௌரவத்தில் கை வைக்கப் போகின்றாவோ தேனு.
  • தமிழை பயமுறுத்தப் போய் அவர்களே மொக்கை வாங்கிய ஷியாமும், வர்ஷினியும்.
  • ஜனாம்மாவின் ஹோட்டலிலே உண்வுண்ட தமிழின் தாயும், இசையும். அதிஷ்ட வசமாக ஜனாம்மாவின் சந்திப்பிலுருந்த காப்பாற்றிய தமிழ்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 23.08.2025

இசையையும், இசையின் அம்மாவையும் ஜனாம்மாவின் ஹோட்டலக்குக் கூட்டிச் சென்ற சிபீ. அது தனது தாயுடையது என்ற தெரியாமல் மன நிறைவாகச் சாப்பிட்டனர் இருவரும். நல்லவிதமாக உபசரித்தான் சிபீ. ஜனாம்மாவை அறிமுகப்படுத்த சிபீ தமிழின் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போகையிலே தமிழ் இடைமறித்துத் தடுத்துவிட்டாள்.

தேனு தனது boy friend றஞ்சித்தை collegemate என்று வீட்டிற்குக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினாள், தனது அம்மாவிடமும், தமிழிடமும். இந்த அறிமுகத்தினை எதிர்பார்க்காத தேனுவின் குடும்பம், ஆடிப்போய் விட்டது. தமிழ் கேள்வி கேட்டதற்கு தமிழுக்கு மேலாகச் சத்தம் போட்டு அதனை ஒரு பிரச்சனை ஆக்கி விட்டாள், தேனு. இதில் பெரிய ஒரு பிரளையமே வரப்போகின்றது என்று நினைக்கின்றேன். றஞ்சித்தின் முதல் அறிமுகத்திலேயே ஒரு பரிசொன்றினைக் கொடுத்தான், றஞ்சித். அத்துடன் அவன் கூறியது எனது girl friendக்கு வாங்கிக் கொடுக்கின்றேன். எத்தனையோ girl friendsக்கு வாங்கிக் கொடுத்தனான். அதனால், எனது girl friendக்கும் வாங்கித் தாறன் என்றான். இது றொம்ப குளப்பமாக இருக்கின்றது. றஞ்சித்தின் வலையில் விழுந்தாளா தேனு?

இதற்குக் காரணம் உண்டு. ஜனாம்மாவின் முன்னைய முதலாளி மனத்தாலேயும், குணத்தாலேயும் ஒரு கெட்டவன். இவனுடைய மகன்தான் தேனுவைச் சுத்தியுள்ள பாம்போ என்று சந்தேகமாக இருக்கின்றது. ஆனால், தேனு போற வழி றொம்பத் தப்பாக இருக்கின்றதோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.
ஆனால், தமிழின் தாய் ஏன் தேனுடைய விஷயத்தில் ஒன்றும் சொல்வதாக இல்லை? தமிழ்தானே தேனுவைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றா. இதனால், தமிழுக்கும், தேனுவுக்கும் அடிக்கடி மோதல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், தேனு, றஞ்சித்திடம் தனது வீட்டாரின் பெயர்களையெல்லாம் சொல்லி வைத்தது போன்று, தனது பாட்டிதான் ஜனாம்மா என்று சொல்லி இருக்க மாட்டாள் என்று என்ன நிட்சயம். ஏனென்றால், தேனு ஒரு பேராசை பிடித்தவளாகத் தான் இங்கு தென்படுகின்றாள். ஆகவே, தன் பெருமையைக் காட்டுவதற்கு தேனு மாதிரியான characterகள் சுயநலாமகத்தான் வாழ்வார்கள். சில சமயம், தமிழுக்கு எதிராக தேனு செயல்பட மாட்டாள் என்று சொல்லவும் முடியாது.

எனவேதான், சொல்கின்றேன், தேனுவால் மிகப் பெரிய பிரச்சனைகளும், ஆபத்துகளும் ஜனாம்மாவிற்கு வரலாம் என்பதில் ஐயமில்லை.

கணேஷனை உடும்புப்பிடி பிடித்துள்ளாள் தமிழ். ஒரு சொல்லு ஜனாம்மாவுக்குப் பிசகினால் காணும் கணேஷனைப் பற்றி அவ்வளவுதான், ஒரு மன்னிப்பில்லாமல் குடும்பமே என்ன கதிக்காளாகுமோ தெரியாது.

தமிழின் suitcaseனைத் தூக்கி சிபீ எறிந்ததிலேயே ஜனாம்மா மிகவும் கோபப்பட்டா. அந்தக் கோபத்தினைத் தணிப்பதற்கு சிபீயினை தமிழின் suitcaseனை எடுத்துவரும்படி சிபீயின் அம்மா மீனா, சிபீயிடம் ஜனாம்மா சொத்துக்களை எல்லாம் தமிழின் பேரிலே எழுதி வைத்துவிடுவா, நீ போய் எடுத்து வா என்றதனை சிபீ மறுத்து விட்டான். ஆனால், ஜனாம்மாவோ, தமிழின் suitcaseனைக் கொண்டுவரவல்லை என்றால், எல்லாருமே றொம்பக் கஷ்டப்பட வேண்டிவரும் என்று சொன்னது, மிகவும் கடுமையான வார்த்தைகள். அதுமட்டுமல்லாமல், ஷியாமுக்கு கன்னத்தில் அறைந்ததுதான் தாமதம், இது என் குடும்பம், நீ அசைஞ்சது இனித் தெரிஞ்சுது ஆளே இடமில்லாமல் ஆக்கி விடுவேன் என்றும், குரலினை உசத்திக் கதைக்கிற வேலையெல்லாம் இங்கு காட்டினி என்றால், உன்னை ஆளில்லாமாக்கி விடுவேன் என்று தமிழ் எச்சரித்ததும் சும்மா சொல்லும் வார்த்தைகள் இல்லை.
இதோட ஷியாம், வர்ஷினியை உசுப்பேற்றி பேய் வேடத்தில் தமிழைப் பயமுறுத்தி இந்த வீட்டை விட்டுக் கலைப்போம் என்று செய்ய வைத்ததும் ஷியாம் தன்னுடைய count downஐத் தானே ஆரம்பித்த மாதிரி இருக்கின்றது.

உனக்குத்தான் சிபீ இல்லை என்று அவனே தன் வாயால ஜனாம்மாவிற்கு முன்னாலே சொன்ன பிறகும், ஷியாம் ஏன் இன்னமும் அந்த வீட்டிலே இருக்க வேண்டும்? சிபீயுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவைதான் என்ன? அதையும் தாண்டி ஷியாம் அங்கு இருப்பது என்றால் நான் முன்பு கூறியது போன்று ஷியாமின் குடும்பம் சொத்துக்கு அலையும் கும்பல் என்றுதானே நினைக்கத் தோன்றுகின்றது.
சில பெண்கள் கடைசி வரைக்கும் முயற்சி செய்வார்கள், தங்கள் காரியம் ஆகும் வரைக்கும். அந்த வெட்கமயற்ற கட்சியில்தான் காரிய காறியாக ஷியாமும் இருப்பது போன்று தெரிகின்றது.

இனி என்ன நடக்கலாம் என்பனவற்றினைப் பார்ப்போம்.

  • தேனு, றஞ்சித்தின் வலையிலே சிக்கிக் கொண்டா. அவவுக்கு ஏதாவது, இடஞ்சல்கள் வர வாய்ப்புகள் உண்டு. றஞ்சித் மாதிரியான பெண்களின் பெலவீனங்களை நன்றாகப் படிக்கக் கூடயவர்கள்தான் றஞ்சித்தைப் போன்றவர்கள்.
  • சில சமயம், றஞ்சித் நல்லவனாகவும் இருக்கலாம். தகப்பன் கூடாதவனாக இருப்பது போன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, கணேஷனையும், சேதுவையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த விஷயத்தினை அறியும் றஞ்சித்தின் தகப்பன் அந்தப் பொயின்றினை வைத்துக் கொண்டு தமிழினை மடக்கி, பின்பு ஜனாமாவை மடக்க முயலலாமல்லவா?
  • இனி சிபீ, ஷியாமுடைய விஷயத்தில் அக்கறை கொள்ள மாட்டான். ஏனென்றால், ஜனாம்மாவின் சொல்லுக்கு எப்பவும் மதிப்புக் கொடுப்பான். அதுமட்டுமல்லாமல், ஷியாம் அன்று நடந்த சமையல் போட்டியிலே சிபீக்கு brandyயினைக் கொடுத்து தோற்கடிக்க முயன்றவளாச்சே என்பது அவன் மனதில் ஓடிக் கொண்டிதான் இருக்கும்.
  • இன்னமும் உங்கள் பதிலைக் காணவில்லை – நான் கேட்டபடி, அந்த கெட்டுப்போன சாப்பாடு கெட்டதா? அல்லது நல்லதா?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!