
posted 27th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழ் இப்போதைக்கு ஜனா வீட்டிலே ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவதான். Tender இந்த முறை கிடைத்தும், தமிழ் பிந்திப் போனதினால் அது கை நழுவி விட்டதானால், ஜனாம்மா தமிழின் சொல்லினை என்ன நடந்தது என்று கூடக் கேட்பதற்குத் தயாராக இல்லை. இதுதான் உறவுக்கும், பிறருக்கும் உள்ள வித்தியாசம்.
- கணேஷனின் குள்ளத்தனத்தினை கண்டு பிடித்த சேது. அதற்குரிய உண்மை நிலைக்கு சிபீயும் காரணமாக இருக்கலாம் என்பதும், இதன் அர்த்தத்தமானது சேதுவுக்கு போகப் போக விளங்கவரும்.
- குறிஞ்சிநாதனுக்கு tender போவதற்கு முழுக் காரணம் சிபீதான். இந்த tenderன் முக்கியத்துவம் தெரியாத, புரியாத, வடி கட்டின முட்டாள் என்று கூடச் சொல்லலாம். இவனுடைய ஒரேயொரு குறிக்கோள், தமிழைத் தோற்கடிப்பது மட்டும்தான். இது எவ்வளவு முட்டாள்தனம் என்பது அவனுக்கே புரியவில்லை.
- உங்களுடைய அப்பாவின் கனவு இந்த tender என்று தமிழ் கூறியபோது விழித்துக் கொண்டிருந்த சிபீ, இனி தன் மூளையினைப் பாவிப்பானா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 25.08.2025
ஒருவரைப் புரிவதற்கு பெரிய மனசு வேண்டும். புரிதல் வேண்டும். அதுமட்டுமல்லாமல், உறவையும், பிறத்தியையும் பிரித்துப் பார்க்கும் காலத்தில் அவதானமும், நிதானமும் முக்கியம். இவ்வாறான சந்தர்ப்பத்தினை இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது. தமிழ் tenderக்குப் பிந்தி போனதினால் அது கை விட்டுப் போய் விட்டது. இதனால், காரணம் என்ன என்று கேட்கக்கூட தயாரி்ல்லாத ஜனாம்மா, அந்த இடத்தினை விட்டு எழுந்து, தமிழினை அங்கு கழுகுகள் மத்தியில் விட்டுப் போன போது தமிழுக்கு எவ்வளவு வலித்திருக்கும். ஆனால், சிபீ tenderஐ எடுக்க முதன்முறையாக அதற்குப் போகாமல் ஷியாமின் வேண்டு கோளுக்கிணங்க pubற்குக் குடிக்கப் போய் கோட்டை விட்ட போது இவ்வளவிற்கு ஜனாம்மா சிபீயைப் பேசினாவா? கோபம் கொண்டாவா? இல்லையே.
ஆனால், தமிழுக்கு என்ன நடந்தது என்று கூடக் கேட்காமல், அவவை எப்படி கைவிட்டு வி்ட்டுப் போனா, அதுவும், தமிழை ignore பண்ணிப் போட்டு போனதும், மற்றவர்கள், அதுவும் குடும்பத்திலே ஒருவிதமான சம்பந்தமில்லாத ஷியாமும் comment பண்ணிக் கதைத்ததும், எவ்வளவு வலித்திருக்கும். ஆனால், தமிழ் விட்டாளா?
பத்திரிகையாளர்களைக் கூட்டி குறிஞ்சிநாதனின் கொம்பனியின் குளறுபடிகளை ஆதாரத்துடன் மீட்டெடுத்ததனால், ஜனாவின் கொம்பனிக்கே அந்த tender கொடுக்கப்பட்டது. இந்த செய்தி tvயில் தெரிவிக்கப்பட்டதனைப் பார்த்த ஜனாம்மா எப்படி தமிழை வாழ்த்தினா என்று பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால், அதே தமிழைத்தானே tender கிடைக்கவில்லை ஆதலால் அனைவரும் கரைச்சுக் கொட்டினார்களே!
ஜனாம்மாவினுடைய இந்தத் தோல்விக்கு யார் காரணம்? சிபீயா? தமிழா? கணேஷனா? குறிஞ்சிநாதனா? சிபீதானே காரணம். தமிழைத் தோற்கடித்து, ஜனாம்மாவின் முன்னால் மரியாதையீனப்படுத்தி, இவள் ஒன்றுக்கும் உதவாதவள் என்று அனைவர் முன்னாலும் சொல்லி வீட்டை விட்டு துரத்துவதிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றான் சிபீ. ஜனாம்மாவிற்கும், குடும்பத்திற்கும் எவ்வளவு செய்து கொண்டிருக்கின்றாள் தமிழ் என்று ஒருதருக்கும் நன்றியுணர்வு என்ற ஒன்று அந்த வீட்டில் இல்லை. ஜனாம்மா கூட tender விஷயத்திலே மாறிவிட்டாவே! சேதுவுக்கு மனமிருந்தும் அவனாலே கூட தமிழுக்கு உண்மையினைச் சொல்லாதவாறு அவனின் வாயை அடைத்து விட்டானே சிபீ.
சிபீ ஏன் இவ்வாறு மனம் கொண்டவனாக இருக்கின்றான்? ஆனால், கணேஷன் தமிழின் quotation fileலினைத் திருடியதை பிழை என்று தெரிந்த சிபீயுக்கு, தனது உண்மையான நிலைமையிலே வாழத் தெரியவில்லையே!
கணேஷன் கூட்டுச் சேர்ந்தவனைப் பார்க்கலாம் இங்கு. அவன்தான் குறிஞ்சிநாதன். இவன் இனியில்லை என்ற ஒரு கேடு கெட்டவன். அதற்கு ஆதாரமாக ஜனாம்மாவே இருக்கின்றா. அவவின் ஆரம்ப வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள். சவால்கள். இதெல்லாம் தாண்டித்தான் ஜனாம்மா இந்த நிலைமைக்கு வந்துள்ளா. ஆனால், வீட்டில் உள்ளவர்கள், சிபீ கூட, ஜனாம்மாவின் சொத்தில்தான் குப்பை கொட்டுகினம். ஆனால், அவர்களின் நினைப்பு வேறு. ஷியாம் எல்லாம் இதில் வாயே திறக்கக் கூடாது. அவளுக்கு இடம் கொடுப்பது சிபீதான். சிபீ தான் செய்யும் கேவலத்தினை எப்போது உணரப்போகின்றான்?
இனி என்னதான் நடக்கலாம்?
- தமிழ், இந்த tender தோல்வியுற்றதற்கு காரணம் யார் என்று கண்டு பிடிப்பாள். சிபீ செய்த கேவலாமான காரியத்தினை ஒருதருக்கும் சொல்ல மாட்டாள், ஆனால், சிபீக்குச் சொல்லுவாள்.
- கணேஷனுக்கும், குறிஞ்சிநாதனுக்கும் உள்ள தொடர்பினை வெளியில் கொண்டு வருவாள். இதனையும் வெளியில் சொல்ல மாட்டாள், தமிழ்.
- என்ன வேண்டுமென்றாலும் கேளு என்று தமிழுக்கு ஜனாம்மா சொன்னது ஞாபகம் இருக்கின்றதா உங்களுக்கு? என்னத்தினைக் கேட்பாள் தமிழ்? என்னத்தினை கொடுப்பா ஜனாம்மா? கொமேன்றில் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!