Varisu - வாரிசு - 16 - 21.03.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysisஆனது 16ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;

  • சிபீயோ அடுத்தவரின் சொல்லினைக் கேட்டு தமிழை வருத்திக் கொண்டிருக்கும் இவனுக்கு குடும்ப வாழ்க்கை ஒத்து வருமா? ஜனாம்மாவும் எப்படியாவது தமிழையும், சிபீயையும் ஒன்றாக்குவதற்கு மறைமுகமாக முயற்சி செய்கின்றா. ஆனால், சுய புத்தி இல்லாத மீனாவின் மூளை எப்போது வேலை செய்யும்?
  • பிரகாஷின் விருப்பத்தினை அம்மாவும், மீனாவும் விரும்பாவிட்டாலும், உண்மையினை எப்படியாவது நிரூபிப்பேன் என்று ஒரு முடிவுடன் வாழும் பிரகாஷ்.
  • தமிழின் வாழ்க்கை பெண்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், இந்த நூற்றாண்டில் தமிழைப் போல ஒரு மூலையிலும் பெண்மை வாழும்.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Varisu - வாரிசு - 16 - 21.03.2026

அமுதாவின் சொல்லினைக் கேட்ட மீனா, தனது மருமகளாம் தமிழினை வாட்டி வதைக்கத் தொடங்கினா. இதனைக் கண்டு கொண்டா ஜனாம்மாவும், முத்தம்மாவும். சிபீக்கோ வீட்டில் என்ன நடக்கின்றதென்று ஒன்றும் புரியாமல் இருக்கின்றது என்பதுதான் ஒரு குடும்பத்திற்கு அழகல்ல என்று புலனாகின்றது. இதில் சிபீயில் குற்றம் கூற முடியாது. ஏனென்றால், சிபீ்க்குத்தான் தமிழைப் பிடிப்பதில்லையே!

ஆரம்பத்திலிருந்து தமிழ் தனக்குத் துரோகம் செய்து விட்டாள் என்று ஒவ்வொருக்காலும் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கையிலே தமிழால் இந்த கொடுமையினை எப்படித்தான் சகித்துக் கொள்ள முடியும்? இப்போது சிபீயின் அம்மாவும் தமிழின் மேலே வஞ்சனையித் தூவுகின்றா. இதனை எப்படித்தான் தமிழ் சகிப்பாளோ தெரியவில்லை.

மீனாவின் மூளையோ அமுதாவால் கெடுக்கப்படுகின்றது. அதற்காக மீனா, தனது மகன்தான் முன்னுக்கு வர வேண்டும். சிபீ ஒருவன்தான் ஜனாம்மாவின் வாரிசாக நியமிக்கப்பட வேண்டும். எங்கேயோ கிடந்து வந்தவள், தமிழ், தங்களது குடும்பத்தினுள் மூக்கினை நுளைக்கக் கூடாது என்று, குரோதத்தினை தமிழின் மேலே அள்ளி வீசுகின்றா மீனா.

ஆனால், தமிழோ மிகவும் மௌனத்தினை காக்கின்றா. மீனா மேலும் மேலும் வேலைகளைத் தமிழுக்குக் கொடுக்கின்றா. அதனுள், முத்தம்மா செய்யும் வேலைகளையும் மீனா தமிழை வைத்து செய்விக்கின்றா. இப்படியான நடைமுறையானது மிகவும் அருவருக்கத்தக்கதாகத் தெரிகின்றது. ஆனால், ஜனாம்மாவுக்கோ மீனாவின் கொடுமைத் தனத்தினையிட்டு தலைப் போட முடியாமல் மனத்தினால் கஷ்டப்படுகின்றா. ஏனென்றால், எப்பவுமே ஜனாம்மாவிற்கு அடங்கிப் போயிருந்த மீனா, அமுதாவின் உசுப் பேற்றலினால் கூட ஆடுகின்றா. ஜனாம்மாவிற்கே வாய் காட்டுகின்றா. மரியாதைக்காக, தன் மகனுக்காகப் பொறுமையாக இருக்கின்றா, ஜனாம்மா.

மீனாவின் முக்கிய நோக்கமானது, அமுதாவின் தூண்டுதலினால், தமிழை மட்டம்தட்டி வைக்க வேண்டும் என்பதாகும். ஆனால், கணேஷனுக்கோ தெரியும், இந்த அதட்டல்கள் எல்லாம் தமிழிடம் வாய்க்காதென்று.

ஆனால், ஒரு நாளைக்கு இவர்களின் அட்டகாசம் எல்லாம் தமிழுக்குத் தெரிய வந்தால், ஒரு கணக்கினை வைத்திருக்கும் தமிழ் இவர்களை வைத்துச் செய்வாளா? அப்படிச் செய்யும் அளவிற்கு இவர்களை மாதிரி அடிமட்டமாக தமிழ் வளர்க்கப்படவில்லையே.

அனால், மிகவும் அடங்கிப் போவதும், கௌரவத்தினை விட்டு மௌனமாக இருப்பதும், தொடருமாக இருந்தால், மீண்டும், மீண்டும் ஏறி உழக்கிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாரும் பெரியவர்கள், குடும்பத்தின் ஒற்றுமைக்காக அடங்கிப் போய் இருக்கின்றாள், தமிழ். மீனாவின் புருஷனைக் காப்பாற்றியவள் தமிழ். இதெல்லாம் பிரகாஷ் அனைவருக்கும் கூறியும், பிரகாஷிற்கு அடங்காமல் இதுதான் தனது அடுத்த முகம் காட்டுவது என்பதா மீனாவின் நடவடிக்கைகள்?

தமிழைப் பற்றியும், அவளின் உண்மையான குணத்தினையும் ஒரு நாளைக்கு ஒருநாள் மீனா அறிந்தால், மீனாவால் தான் செய்த கொடுமைகளை மீட்டெடுத்திட முடியுமா? என்னென்று மீனா தமிழுடன் முகம் கொடுத்துக் கதைப்பா? இப்படியான மீனா மாதிரியானவர்கள் கதைப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல், முக்கியமான ஆபீஸ் வேலைகளைச் செய்ய விடாமல் தடைசெய்து தமிழுக்குக் கூடாத பெயரினை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இதனால், தனது மகன் சிபீக்குத்தான் எல்லாப் புகழும் வந்து சேர வேண்டும் என்று பேராசை மீனாவிற்கு. இதுதான் மீனாவின் மிகப் பெரிய ஆசையாகும். ஆனால், தமிழ் இல்லாமல் மீனாவின் ஆசை அதுதான் சிபீயால் உச்சி மேலுக்கு வர முடியாவே முடியாது.

ஒருநாளும் தமிழ் ஆபீஸ் வேலைகளில் எந்தவிதமான ஒழுங்கம் குறைந்து நடந்ததேயில்லை. ஆனால், இப்போது மீனாவினால், தமழுக்கு ஒழுங்காக ஆபீஸ் வேலையினை செய்ய முடியாமல் இடஞ்சல் பண்ணிய வண்ணமாக மீனா தமிழை நடத்துகின்றா.

இது மட்டுமல்லாமல், தமிழின் அப்பா தமிழின் கல்யாணத்திற்காக 20 இலட்சம் வட்டிக்குக் கடன் வாங்கியதினால், செல்வரத்தினத்தின் கடனை அசலும் வட்டியுமாக வசூலிப்பதற்காக தமிழிடம் கேட்டு கைநாட்டும் வாங்கிக் கொண்டு போயிருக்கின்றாள். இதற்காக தமிழ் ஒருவரிடமும் சொல்லாமல் பகுதி நேர வேலைக்காக போகின்றாள். ஆனால், தமிழால் என்னென்று ஜனாம்மா வீட்டாரிடம் சொல்ல முடியும்? இவ்வளவு நேர்மையாக தமிழ் நடக்கும் போதே தமிழ் இந்தச் சொத்திற்காகத்தான் திட்டமிட்டு உள்ளே வந்துள்ளாள் என்று திண்று தண்ணீர் குடிக்கையிலே, இப்போ இது தெரிந்தால் தமிழின் கதை கந்தல்தான்.

ஆங்கிலம் கற்பதற்காக ஒரு கொலிஜுக்குப் போவதாக தமிழ் அனைவரிடமும் பொய் சொல்லி பகுதிநேர வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளாள். இதையும் தமிழ் பொய் சொல்லுகின்றாள் என்று சிபீயும் சொல்லப் போகின்றானோ என்ற சந்தேகமும் எழுகின்றது.
தமிழுக்கோ பிரச்சினையின் மேல் பிரச்சினை எழுந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், அம்முவும் இந்த வீட்டினுள் வரக் கூடாதென்று ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கின்றது. எல்லாவற்றினையும் தமிழ் என்னென்று தாக்குப் பிடிக்கப் போகின்றாவோ என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)