posted 17th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழ், அயலியினாலும், சிவாவினாலும் காப்பாற்றப்பட்டு கல்யாண மண்டபத்திற்கு கொணரப்பட்டாள்.
- தாலி கட்ட செக்கன் கணக்கினில் தமிழ் கல்யாணத்தினை நிறுத்தினாள்.
- தமிழைக் கண்டதும் ஜனாம்மா மேடையினை விட்டு இறங்கி ஓடோடி வந்து தமிழைக் கட்டியணைத்தா. தமிழுக்கு நடைபெற்றதனை உன்னிப்பாகக் கேட்டறிந்தா. ஆனால், சிபீயோ அதனை நம்பவில்லை. சம்யூத்தாவின் கதையினைத்தான் நம்பினான்.
- கணேஷனோ தனக்கான சந்தர்ப்பம் இது என தமிழுக்கு ஆதரவாகக் கதைத்தான்.
- சேது, ஆதாரங்களைச் சேகரித்திருந்தாலும் வாயைத் திறக்கவில்லை. பயத்தினாலோ அல்லது நேரத்திற்காகவோ!
- ஜனாம்மாவின் முடிவான தமிழுக்குத்தான் சிபீ தாலி கட்ட வேண்டும் என்று முடிவிற்கு சிபீ விரும்பவில்லை. தனக்கு விருப்பமில்லை என்று பிடிவாதம் பிடித்த சிபீ.
- ஜனாம்மாவும், தமிழும் சேர்ந்து விளையாடுகின்றனர் என்று பழியினை ஜனாம்மாவின் மேலும், தமிழின் மேலும் பழி போடுவதற்கு சந்தர்ப்பம் இங்கு உருவாக்கப்படலாம்.
- சாட்சிக்காக ஏதாவது இருக்கின்றதா என்பதற்கு அயலியும், சிவாவும்தான் ஏதாவது ஆதாரங்களைக் கொண்டு வர வேண்டும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 15.11.2025
தமிழைக் காணவில்லை என்று ஜனாம்மா ஒருபக்கம் தேடுகையில், சிபீ மண மேடையிலிருந்து தமிழைக் காணவில்லை என்று தேடுகின்றன். அவனாகத் தேடவில்லை, மாறாக, அவன் மனம் தேடுகின்றது. கேடீயைக் கேட்டும், கேடீயிடமிருந்து வந்த பதில் அவனுக்கு உறுத்தலாக இருந்தது. தமிழ் விரும்பிய ஒருத்தனுக்கு தாலி கட்டுறதைப் பார்த்து ஆசீர்வாதமும் போடவா விரும்புவாள் ஒரு பெண் என்பதனைக் கேட்டு அவன் மனம் உறுத்தினாலும், அதனை திசை மாற்றுகின்றாள் சமுயூத்தா. ஏனென்றால் அவள்தானே சூத்திரதாரி. தமிழ் இனி வரமாட்டாள். அவளின் காற்றுக் கூட இந்தப்பக்கம் வீசாது, செத்துப் போய் விடுவாள் என்ற கனவினில் அவள்.
சிபீ தமிழைத்தான் தேடுவான் என்று சம்யூத்தாவிற்கு நன்கு தெரியும். ஒரு விதமான குற்ற உணர்வுகளும் இல்லாமல் ஒரு வயசுப் பெண்ணை கொல்லச் சொல்லி அனுப்பி விட்டு தனது தாம்பத்திய வாழ்க்கைக்கு கால் பதிக்கலாம் என்று சம்யூத்தாவினதும், அவளது குடும்பத்தினதும் பாவனையினை வைத்து, இவர்கள் உண்மையாகவே பிறப்பிலிருந்தே criminalகள் என்றுதான் தோன்றுகின்றது.
அயலியினாலும், சிவாவினாலும் முன்னெடுக்கப்பட்ட வெகு தீவிர நடவடிக்கையினால், தமிழ், செக்கனுக்குள் மீட்கப்பட்டாள். இல்லை என்றால், செங்கல் சுடலையினுள், தமிழ், தீயினில் சங்கமமாகி இருக்க வேண்டி நேர்ந்திருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் பொலிஸ் கொடுத்த உடனடித் தொலை பேசி அழைப்புகளின் தகவல்கள் கண்காணிப்புக் குழு சிவாவுக்கும், அயலிக்கும் கொடுத்த துப்புத்தான்.
எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்துள்ளாள் தமிழ், என்பதனைப்பற்றி எப்பனும் அனுதாபமோ, ஆச்சரியமோ, துக்கமோ, பயங்கரமான சம்பவத்திலிருந்து மீண்டுள்ளாள் என்றொரு ஏக்கமோ அல்லது கலக்கமோ என்று ஒருதருக்கும் இல்லை. தமிழ் அதுவும், தங்கள் குடும்பத்திற்காக என்றில்லாமல் ஆளுக்கொரு கதையினை வாயிருக்கிறதென்று கதைக்கின்றார்கள் இவர்கள். ஒருதருக்கும் துடிக்கவில்லை.
தமிழ் ஒருநாளும் பொய் சொல்ல மாட்டாள் என்பது எல்லாருக்கும் தெரிந்தும், இப்போது சாவிலிருந்து தப்பி வந்த தமிழை சந்தேகப் படுவது என்பது கவலைக்குரிய விடயமாகும். அதுவும், சிபீ சந்தேகப்படுவதுதான் தமிழால் தாங்கிக் கொள்ள முடியாது.
சிபீ என்ன கேடு கெட்டாலும் பரவாயில்லை. அது அவரவர் சுதந்திரம். ஆனால், இதில் ஜனாம்மாவின் முக்கிய பங்கு இருப்பதனால்தான் தமிழ் இவ்வளவிற்குக் கதைக்கின்றாள், அதனுள் தலையுமிடுகின்றாள். சிபீ யாரையும் கல்யாணம் பண்ணட்டும், ஆனால், சம்யூத்தா வேண்டாம் என்பதுதான் ஜனாம்மாவிடம் தமிழ் ஆணித்தரமாகக் கேட்டுக் கொண்டது.
ஏனென்றால், ஜனாம்மாவின் சொத்தினை முழுவதுமாக சிபீயைக் கல்யாணம் பண்ணுவதனால் சட்டத்தின் பிரகாரம் ஆட்டையைப் போடுவதும், வீட்டில் உள்ள எல்லாரும், ஜனாம்மா, சிபீ உட்பட அனைவரும் செல்லாக் காசாக றோட்டிலே பிச்சை எடுக்க வைப்பதுதான் சம்யூத்தாவினதும், அவளது குடும்பத்தினரினதும் குறிக்கோளாக உள்ளது.
என்ன மயக்கத்தில் சிபீ உள்ளானோ தெரியவில்லை. அதொன்றும் விளங்காதது போல இருக்கின்றான். சிபீக்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியவில்லை.
இரும்பினால் சம்யூத்தா தமிழைத் தாக்கிய காயம் இன்னமும் பச்சையாகவே இரத்தம் கொட்டிய நிலையில் இருக்கின்றது. அதனைப் பற்றி ஒருதரும் கேட்பாரில்லை, ஜனாம்மா, தேனுவைத் தவிர. அப்போ உங்களுக்கெல்லாம் தமிழ் கதைப்பதெல்லாம் பொய்தானே என்று தோன்றுகின்றதோ?
தமிழுக்கு ஆதரவாக கணேஷன் கதைத்தான். இது கணேஷனின் சுயநலமாகவும் இருக்கலாம். இதைத்தான் சம்யூத்தா இதே சாட்டாக கணேஷினின் உண்மையான சுபாவத்தினை ஆதாரமாக முன் வைத்தாள். இவ்வளவு காலமும் தமிழுக்கும், அவளின் குடும்பத்திற்கும் அமுதாவுடன் சேர்ந்தும் செய்த அநியாயங்கள், இப்போது கணேஷனுக்கே எதிரியாக வந்து நிற்கின்றன.
சிபீ இப்பவும் சம்யூத்தாவை உண்மையாகக் கல்யாணம் பண்ணவில்லைதான். ஆனால், சம்யூத்தா அப்படி இல்லையே! யாரும் ஒரு பெண் சும்மா ஒருவனுக்குக் கழுத்தை நீ்ட்டுவாளா? இதைக் கூட ஆராய்ந்து பார்க்காமல் இருக்கும் மனநிலையில் சிபீ.
தமிழிடம் ஆதாரங்களைக் கேட்கும் சம்யூத்தா. அதற்குத்தானே மண்டபத்திலுள்ள CCTVகளை முழுவதுமாக வேலை செய்யாமல் செய்யப்பட்டுள்ளதே! அதெல்லாம் பிறேமினுடைய ஒரு பக்காப் plan ஆகும். அதனால்தான், துணிந்து தமிழிடம் ஆதாரங்களைக் கேட்கின்றாள் சம்யூத்தா. ஆனால், கடையின் CCTVவியின் Footage ஒன்று அகப்படவில்லையா! அதேபோல்தான், வேறு ஆதாரங்கள் சிக்கும், அயலியிடமும், சிவாவிடமும்.
இறுதி முடிவானது ஜனாம்மாவினுடையதுதான். ஜனாம்மா தமிழை மேடையில் உட்காரும்படி சொல்கின்றா. ஆனால், சிபீ எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றான். சம்யூத்தாவின் குடும்பமும், இது ஜனாம்மாவினதும், தமிழினதும் நாடக அரங்கேற்றம் என்று சொல்லி தமிழுக்கு எதிராக நிற்பார்கள். ஜனாம்மா மிகவும் தப்பு செய்கிறாய் என்று சிபீயின் வாதம். அதாவது, தமிழைக் கல்யாணம் பண்ண மாட்டேன் என்பதுதான்.
ஜனாம்மா எப்பவும் தப்பு செய்யாதவ என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் சிபீ ஜனாம்மாவை ஆனைவருக்கும் முன்னால் வைத்து தப்பு செய்கிறாய் என்றால் இது ஜனாம்மாவிற்கு எவ்வளவு கேவலம் என்று சிபீ நினைக்காமல் சொல்கின்றான். இது எவ்வளவு அவமானம் ஜனாம்மாவிற்கு. சிபீயை எதிர்த்து இங்கு யார் வரப் போகின்றார்கள்? வருவார்கள். தெய்வம் ஒன்று இருக்கின்றதுதானே!
அயலியும், சிவாவும் official லாக தங்களது படையுடன் சம்யூத்தாவினதும், அவளது குடும்பத்தினதும் சரித்திரத்தோடு. சம்யூத்தா இலண்டனிலே செய்த குற்றங்களிலிருந்து இங்கு இந்தியாவில் செய்ய குற்றங்கள் அனைத்தும், இது மட்டுமல்லாமல், அவளின் குடும்பத்தின் முழுச் சரித்திரமும் அடங்கலாக எல்லாவற்றுடனும் வருவார்கள்.
இவர்களுக்கு உதவியாக, மாறன், வீரா, வெற்றி எல்லாரும் இவர்களது குற்றங்கள் அடங்கிய பட்டியலுடன் வருவார்கள். அப்போது அனைவருக்கும் தெரியும், ஜனாம்மா பிழை செய்கின்றாவா என்று?
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!